வெளியூரில் கணவர்… 8 மாத குழந்தையை விட்டுவிட்டு மாடியில் போன் பேசிய தாய்! பின்பு நடந்த துயரம்!

இந்தியாவில்

8 மாத குழந்தையுடன் தாய் வீட்டிற்கு வந்த பெண் தனது மொட்டை மாடியிலிருந்து கணவரிடம் போன் பேசிய போது நிலைதடுமாறி கீழே விழுந்ததால் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இந்தியாவில் பெரம்பலூர் மாட்டத்தைச் சேர்ந்தவர் சரவணன். இவரது மனைவி செல்வி. இந்த தம்பதிகளுக்கு 8 மாத பெண் குழந்தை ஒன்று இருக்கின்றது.

சரவணம் திருப்பூரில் பணிபுரிந்து வந்த நிலையில், கணவருக்கு போன் செய்வதற்கு மொட்டை மாடிக்கு வந்துள்ளார். அங்கு போனில் பேசிக்கொண்டிருந்த தருணத்தில் மாடியிலிருந்து தவறி கீழே விழுந்து பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

மொட்டை மாடியின் சுற்றுச்சுவர் குறைவான உயரத்தில் இருந்ததால் செல்வி தவறி விழுந்ததாகக் கூறப்படும் நிலையில் பொலிசார் விசாரித்து வருகின்றனர்.