வெள்ளத்தில் சிக்கிய மக்கள்! மீட்பு பணிகளில் கடற்படையினர்!

வெள்ளப்பெருக்கு

சீரற்ற வானிலை காரணமாக வெள்ளத்தில் சிக்கிய 32 பேரை கடற்படையின் உயிர் பாதுகாக்கும் பிரிவினர் மீட்டடுள்ளனர்.

கலா வாவி பெருக்கெடுத்துள்ள நிலையில் அனுராதபுரத்தில் இப்பலோகமா பகுதியில் வெள்ளத்தில் சிக்கியிருந்த மக்களை மீட்கும் பணிகள் முன்னெடுத்ததாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

நாட்டில் ஏற்பட்டிருக்கும் சீரற்ற காலநிலை காரணமாக பல பகுதிகளில் பொது மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அவ்வாறு பாதிக்கப்பட்ட மக்களை மீட்கும் நடவடிக்கைகளுக்கு கடற்படையினர் முன்வந்து செற்படுமாறு கடற்படை தளபதி கேட்டுக்கொண்டதை அடுத்து இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

எவ்வாறான சந்தர்ப்பத்திலும் மக்களுக்கு உதவி செய்வதற்கு அவர்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.