இந்த வார ராசி பலன் ( டிசம்பர் 22 முதல் 28 வரை) : இந்த ராசிக்காரர்கள் எல்லாம் கவனமாக இருக்க வேண்டுமாம்!

இந்த வார ராசி பலன்

டிசம்பர் 16 முதல் 22 வரை மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களுக்கும் பலன்கள் எப்படி இருக்கும் என்று படித்து பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.

மேஷம்: குரு, ராகு, சந்திரனால் நற்பலன் உண்டாகும். உங்கள் மனதில் புத்துணர்வு மேலோங்கும்.

வாழ்வில் முன்னேற புதிய வாய்ப்பு கிடைக்கும். உடன்பிறந்தவர்களின் உதவி கிடைக்கும். குடும்பத்தில் சுபநிகழ்வு பற்றிய பேச்சு நடந்தேறும். பிள்ளைகள் பிடிவாத குணத்துடன் செயல்படுவர். வெளியூர் பயணம் பயனறிந்து மேற்கொள்ளலாம். எதிர் மனப்பாங்கு உள்ளவர்களிடம் இருந்து விலகி இருக்கவும். மனைவி குடும்ப ஒற்றுமையை பாதுகாத்திடுவார். தொழில், வியாபாரத்தில் மிதமான பணவரவு கிடைக்கும். பணியாளர்கள் நிர்வாகத்தின் சட்டதிட்டம் தவறாமல் பின்பற்றவும். பெண்கள் பிள்ளைகள் நலனில் அக்கறை கொள்வர். மாணவர்கள் படிப்பில் சிறப்பிடம் பெறுவர்.
சந்திராஷ்டமம்: 23.12.19 பகல் 12:53 மணி- 25.12.19 மாலை 5:33 மணி
பரிகாரம் : துர்க்கை வழிபாடு நன்மை தரும்.

ரிஷபம்: சந்திரன், செவ்வாய், சுக்கிரன் நற்பலன் தருவர். உங்கள் பேச்சு செயலில் சமயோசிதம் நிறைந்திருக்கும். உடன்பிறந்தவரின் பணி நிறைவேற உதவுவீர்கள். உறவினர் வருகை மகிழ்ச்சியைத் தரும். பிள்ளைகள் படிப்பு, வேலையில் முன்னேறுவர். விவகாரம் அணுகாத சுமுக வாழ்வு இருக்கும். மனைவியின் ஆர்வமிகு செயல்கள் குளறுபடியாகலாம். தொழில் வளர்ச்சி பெற நவீன மாற்றம் தேவைப்படும். பணியாளர் நிர்வாகத்தின் சட்டதிட்டம் தவறாமல் பின்பற்றவும்.பெண்கள் வீட்டுச் செலவில் சிக்கனம் பின்பற்றுவர். மாணவர்கள் படிப்பில் அக்கறையுடன் ஈடுபடுவர்.

பரிகாரம்: விநாயகர் வழிபாடு வினை தீர்க்கும்.

மிதுனம்: சுக்கிரன், குரு, சந்திரன் அளப்பரிய நற்பலன் தருவர். மனதில் மகிழ்ச்சி பெருகும். குடும்பத்திற்காக அதிக பணம் செலவு செய்வீர்கள்.

வாகனத்தின் பயன்பாடு அளவுடன் இருக்கும். பிள்ளைகளின் எதிர்கால வாழ்வுக்கு தேவையானதை செய்வீர்கள். கடனில் ஒரு பகுதியை செலுத்துவீர்கள். சொத்து தொடர்பான ஆவணம் பிறர் பொறுப்பில் தர வேண்டாம். மனைவியின் செயல்கள் சிறப்பாக அமைந்து நற்பெயர் பெற்றுத் தரும். தொழில். வியாபாரத்தில் போட்டி குறைந்து பணவரவு கூடும். பணியாளர்கள் பணியிலக்கை பூர்த்தி செய்வர். பெண்கள் கணவரின் அன்பில் மகிழ்ச்சிகர வாழ்வு நடத்துவர். மாணவர்களுக்கு படிப்பில் ஆர்வமுடன் ஈடுபடுவர்.
சந்திராஷ்டமம்: 27.12.19 இரவு 12:51 மணி- 28.12.19 நாள் முழுவதும்.
பரிகாரம்: சாஸ்தா வழிபாடு இடர் நீக்கும்.

கடகம்: சூரியன், புதன், சனீஸ்வரர், கேது அனுகூல அமர்வில் உள்ளனர். சமூக நிகழ்வு இனிய அனுபவம் தரும். உற்சாகத்துடன் பணியில் ஈடுபடுவீர்கள்.

வெளியூர் பயணத்தால் நன்மை அதிகரிக்கும். பிள்ளைகளின் மனதில் ஆன்மிக நம்பிக்கை வளரும். படிப்பு வேலையில் நல்ல முன்னேற்றம் காண்பர். விருந்து, விழாவில் கலந்து கொள்வீர்கள். மனைவி விரும்பிய பொருள் வாங்கித் தருவீர்கள். தொழில், வியாபாரத்தில் அபிவிருத்திப்பணி மேற்கொள்வீர்கள். பணியாளர்களுக்கு எதிர்பார்த்த சலுகை கிடைக்கும். பெண்கள் பிள்ளைகளின் நலனில் அக்கறை கொள்வர். மாணவர்கள் நண்பர் உதவியால் படிப்பில் முன்னேறுவர்.
பரிகாரம்: லட்சுமி நரசிம்மரை வழிபடுவது நல்லது.

சிம்மம்: செவ்வாய், புதன், குரு, ராகு அனுகூல அமர்வில் உள்ளனர். புதிய உத்தியுடன் திட்டமிட்ட பணிகளை நிறைவேற்றுவீர்கள்.

சமூக நிகழ்வுகளால் இனிய அனுபவம் பெறுவீர்கள். வாகனத்தின் பயன்பாட்டால் நன்மை அதிகரிக்கும். பிள்ளைகள் உங்கள் வழிகாட்டுதல்களை ஏற்று நடப்பர். உறவினர்களின் உதவி தக்க சமயத்தில் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி கூடும்.விருந்து விழாவில் கலந்து கொள்வீர்கள். மனைவி குடும்ப நலனில் அக்கறை கொள்வார். தொழில், வியாபாரத்தில் வளர்ச்சிப்பணி செய்வீர்கள். சேமிப்பு கூடும். பணியாளர்கள் சிறப்பாக பணிபுரிந்து நற்பெயர் பெறுவர். பெண்கள் நகை, புத்தாடை வாங்குவர். மாணவர்கள் படிப்பில் தரத்தேர்ச்சி பெறுவர்.
பரிகாரம் : துர்க்கை வழிபாடு தைரியம் வளர்க்கும்.

கன்னி: புதன், சுக்கிரன், சந்திரன் அதிகளவு நன்மை தருவர். செயல்களை புதிய அணுகுமுறையால் நிறைவேற்றுவீர்கள்.

புதிய முயற்சியால் பணவரவு அதிகரிக்கும். தாய்வழி சார்ந்த உறவினர் அதிக அன்பு பாராட்டுவர். வெளியூர் பயணம் பயனறிந்து மேற்கொள்ளலாம். பிள்ளைகளின் நற்செயல்கள் நிறைவேற உதவுவீர்கள். உடல்நலத்திற்கு ஒவ்வாத உணவுகளைத் தவிர்க்கவும். மனைவியின் நல்ல கருத்து குடும்பத்தில் ஒற்றுமையை பலப்படுத்தும். தொழில், வியாபாரத்தில் அதிக உழைப்பால் வளர்ச்சியை ஏற்படுத்துவீர்கள். பணியாளர்கள் பொறுப்புணர்வுடன் பணிபுரிவர். பெண்கள் மனம் விரும்பியபடி நகை, புத்தாடை வாங்குவர். மாணவர்கள் படிப்பில் முன்னேற உரிய பயிற்சி பெறுவர்.
பரிகாரம்: பெருமாள் வழிபாடு செல்வ வளம் தரும்.

துலாம்: சூரியன், கேது, சனீஸ்வரர், சுக்கிரன் சுபபலன் வழங்குவர். பணிகளை உரிய முன் ஏற்பாட்டுடன் துவங்குவீர்கள்.

தாய்வழி உறவினர் ஓரளவு உதவுவர். பிள்ளைகள் பெற்றோர் கருத்தை வேதமென ஏற்றுக்கொள்வர். உடல்நிலை சீராக இருக்கும். மனைவியின் செயல்கள் நல்லவிதமாக அமைந்திடும். குடும்பத்தில் ஒற்றுமை நிறைந்திருக்கும். தொழிலில் வளர்ச்சிக்கான வாய்ப்பை பயன்படுத்துவீர்கள். ஆதாயம் சேமிப்பாக மாறும். பணியாளர்களுக்கு விரும்பிய சலுகை கிடைக்கும். வெளியூர் பயணத்தில் உரிய பாதுகாப்பு பின்பற்றவும். பெண்கள் நற்செயலால் குடும்பத்திற்கு பெருமை சேர்ப்பர். மாணவர்கள் படிப்பில் சிறந்து நண்பருக்கும் உதவுவர்.
பரிகாரம்: விநாயகர் வழிபாடு வினை தீர்க்கும்.

விருச்சிகம்: சுக்கிரன், குரு, சந்திரனால் நற்பலன் கிடைக்கும். முக்கியபணி கால அவகாசத்தில் நிறைவேறும். உடன்பிறந்தவர் செயலை குறை சொல்ல வேண்டாம்.

வாகனத்தில் பராமரிப்புச் செலவு அதிகரிக்கும். பிள்ளைகள் படிப்பு. வேலையில் முன்னேற்றம் காண்பர். பணக்கடன் தொந்தரவு தரலாம். மனைவி வழி சார்ந்த உறவினர் ஓரளவு உதவுவர். தொழிலில் உற்பத்தி, விற்பனை சுமாராக இருக்கும். பணியாளர்கள் கூடுதல் கவனமுடன் பணிபுரிவது அவசியம். வெளியூர் பயணம் இனிய அனுபவம் தரும். பெண்கள் தாய் வீட்டு உதவியை கேட்டுப் பெறுவர். மாணவர்கள் படிப்பு தவிர பிற விவாதம் பேச வேண்டாம்.
பரிகாரம்: பைரவர் வழிபாடு வெற்றி தரும்.

தனுசு: செவ்வாய், சுக்கிரன், சந்திரன் அளப்பரிய நன்மை வழங்குவர். உங்கள் பேச்சில் வசீகரம் இருக்கும்.

அக்கம் பக்கத்தவர் அன்புடன் பழகுவர். மனிதாபிமான சிந்தனையுடன் உதவுவீர்கள். வீடு, வாகனத்தில் உரிய பாதுகாப்பு பின்பற்றவும். பிள்ளைகளின் உடல் ஆரோக்கியம் மருத்துவ சிகிச்சையால் மேம்படும். வழக்கு, விவகாரத்தில் சமரசத்தீர்வு பெறலாம். மனைவியின் செயல்களை குறை சொல்ல வேண்டாம். தொழில், வியாபாரத்தில் பணவரவு சீராகும். பணியாளர்கள் சிறப்பாக பணிபுரிந்து பாராட்டு பெறுவர். பெண்கள் வீட்டுச் செலவில் சிக்கனம் பின்பற்றுவர். மாணவர்கள் படிப்பில் புதிய சாதனை நிகழ்த்துவர்.
பரிகாரம்: முருகன் வழிபாடு நம்பிக்கை வளர்க்கும்.

மகரம்: சுக்கிரன், ராகு, சந்திரன் அனுகூல அமர்வில் உள்ளனர். முக்கிய பணி இஷ்டதெய்வ அருளால் நிறைவேறும்.

வாழ்வியல் நடைமுறை சிறப்பாக அமையும். தாய்வழி உறவினர் தேவையான உதவியை வழங்குவர். வீடு, வாகனத்தில் பராமரிப்புச் செலவு ஏற்படும். பிள்ளைகள் படிப்பு, செயல்திறனில் மேம்படுவர். உடல் ஆரோக்கியம் பலம் பெறும். வழக்கு, விவகாரத்தில் சுமுக தீர்வு கிடைக்கும். விருந்து, விழாவில் அடிக்கடி கலந்து கொள்வீர்கள். மனைவி அன்பு பாசத்துடன் உதவுவார். தொழில், வியாபாரம் வளர்ச்சிக்கான புதிய வாய்ப்பு கிடைக்கும். பணியாளர்களுக்கு சலுகை கிடைக்கும். பெண்கள் இஷ்டதெய்வ வழிபாடு நடத்துவர். மாணவர்களுக்கு படிப்பில் கூடுதல் கவனம் தேவை.
பரிகாரம்: அம்பிகை வழிபாடு மகிழ்ச்சி தரும்.

கும்பம்: பெரும்பாலான கிரகங்கள் அனுகூல அமர்வில் உள்ளனர். உற்சாகமுடன் பணியில் ஈடுபடுவீர்கள்.

நற்பெயரும் புகழும் தேடி வரும். புதிய வாகனம் வாங்க நிதியுதவி கிடைக்கும். பிள்ளைகள் பெற்றோரின் வழிகாட்டுதலை தயக்கமுடன் ஏற்றுக் கொள்வர். பூர்வீகச் சொத்தில் அளப்பரிய பணவரவு உண்டாகும். வழக்கு, விவகாரங்களில் சுமுகத் தீர்வு கிடைக்கும். மனைவி கருத்திணக்கமுடன் நடந்து கொள்வார். தொழில், வியாபாரம் புதியவர்களின் ஆதரவால்செழிக்கும். அரசு வகையில் உதவி கிடைக்கும். பணியாளர்கள் புதிய தொழில் நுட்பங்களை அறிந்து கொள்வர். பெண்கள் தாய் வீட்டுக்கு உதவுவர். மாணவர்கள் நன்றாக படித்து பரிசு வாங்குவர்.
பரிகாரம்: சிவன் வழிபாடு நன்மை தரும்.

மீனம்: சூரியன், புதன், சுக்கிரன், சந்திரன் வியத்தகு நற்பலன் தருவர். நண்பர் உங்களின் நல்ல குணங்களை வாழ்த்துவர்.

உடன்பிறந்தவர்களுக்கு சுபநிகழ்ச்சி நடந்தேறும். தாய்வழி உறவினர்க்கு உதவுவீர்கள். வெளியூர் பயணம் இனிய அனுபவம் தரும். பிள்ளைகள் பெற்றோரின் எண்ணங்களை மதித்து செயல்படுவர். விருந்து, விழாவில் கலந்து கொள்வீர்கள். மனைவியின் நற்செயல் குடும்பத்தில் ஒற்றுமையை வளர்க்கும். தொழில், வியாபாரத்தில் போட்டி குறைந்து லாபம் அதிகரிக்கும். பணியாளர்கள் சுறுசுறுப்பாக பணியிலக்கை நிறைவேற்றுவர். பெண்கள் இஷ்டதெய்வ வழிபாடு நடத்துவர். மாணவர்கள் படிப்பில் அதிக தேர்ச்சி பெறுவர்.
சந்திராஷ்டமம்: 22.12.19 காலை 6:00 மணி- 23.12.19 பகல் 12:52 மணி
பரிகாரம்: தட்சிணாமூர்த்தி வழிபாடு நிம்மதி தரும்.