அஸ்வினி (29)

விருதுநகர் அருகே கணவரை விட்டு பிரிந்து வாழ்ந்த பெண் தற்கொ லை செய்துகொண்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த ஓய்வு பெற்ற நீதிமன்ற அலுவலரான செல்வராஜ் என்பவரின் மூத்த மகள் அஸ்வினி (29). இவருக்கும் தென்காசி பகுதியை சேர்ந்த அருணாச்சலம் என்பவருக்கும் கடந்த 6 வருடங்களுக்கு முன்பாக திருமணம் நடைபெற்றுள்ளது.

இந்த தம்பதியினருக்கு அனன்யா(5), சிவஆறுமுகவேல் (3) என்ற 2 குழந்தைகள் உள்ளனர். 9 மாதங்களுக்கு முன் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அஸ்வினி கோபித்துக்கொண்டு தன்னுடைய குழந்தைகளுடன் தாய் வீட்டிற்கு வந்துவிட்டார்.
அவர்கள் இருவரையும் சேர்த்து வைக்க, இருவீட்டாரும் மேற்கொண்ட அனைத்து முயற்சிகளும் தோல்வியடைந்ததாக தெரிகிறது.

இந்த நிலையில் நேற்றைக்கு முன்தினம் இரவு, அஸ்வினி தூ க்குபோ ட்டு தற்கொ லை செய்துகொண்டுள்ளார். அதிகாலை நேரத்தில் குழந்தைகள் அழுதுகொண்டிருக்கும் சத்தம் கேட்டு அவருடைய பெற்றோர் அறையை திறந்துள்ளனர்.

அப்போது மகள் தூ க்கில் தொ ங்குவதை பார்த்து அதிர் ச்சியடைந்த அவர்கள் உடனடியாக பொலிஸாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற பொலிஸார், அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்ததோடு, அவர் எழுதிவைத்திருத்த கடிதத்தையும் கைப்பற்றினர்.

அந்த கடிதத்தில், தன்னுடைய தற்கொ லைக்கு மாமியார் சிவகாமிசுந்தரி, மாமனார் சிவசக்திவேலு மற்றும் கணவரின் தங்கை மகேஸ்வரி ஆகியோர் காரணம் என குறிப்பிட்டிருந்துள்ளார்.
இந்த நிலையில் சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள பொலிஸார், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
