தனியாக பாலத்தின் மீது நின்று கொண்டு அழுது கொண்டிருந்த கர்ப்பிணி பெண்! விசாரணையில் தெரிந்த உண்மை!

தமிழகத்தில்

ஏழு மாதத்துக்கு முன்னர் திருமணமான இளம்பெண் தற்கொ லைக்கு முயன்ற நிலையில் பொதுமக்கள் அவரை காப்பாற்றி பொலிசில் ஒப்படைத்தனர்.

கூடலூர் அருகே உள்ள குறுவனத்துப்பாலத்தில் நின்று அழுதுகொண்டு இருந்த இளம்பெண் ஒருவர் முல்லைப்பெரியாற்றில் குதி த்து தற்கொ லைக்கு முயன்றார்.

அவரை அப்பகுதி மக்கள் ஓடிவந்து பிடித்தனர். விசாரணையில் இவர் கம்பம் அருகே உள்ள அணைப்பட்டியைச் சேர்ந்த பிரியங்கா (20) என தெரியவந்தது.

மேலும், வேறு சமுதாயத்தைச் சேர்ந்த பூவரசன் (25) என்பவரை காதலித்து 7 மாதத்திற்கு முன் திருமணம் செய்ததாகவும், தான் தற்போது கர்ப்பமாக இருப்பதாகவும், கடந்த 10 நாட்களாக தனது கணவரை காணவில்லை எனவும் பிரியங்கா கண்ணீருடன் தெரிவித்தார்.

இதனால் மன முடைந்து ஆற்றில் குதி த்து தற்கொ லை செய்ய வந்தேன் என்றார். உடனடியாக அப்பகுதி மக்கள் கர்ப்பிணி பெண் பிரியங்காவை பொலிசாரிடம் ஒப்படைத்தனர். சம்பவம் தொடர்பாக பொலிசார் வழக்குப்பதிவு செய்து பூவரசனை தேடி வருகின்றனர்.