நாட்டு மக்களுக்கு மகிழ்ச்சியான தகவலை வெளியிட்டுள்ள இறைவரி திணைக்களம்!

இறைவரி திணைக்களம்

நாட்டின் உள்ளுர் சந்தையில் பொருட்களின் விலைகள் குறைவடைந்துள்ளதாக உள்நாட்டு இறைவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது.

சமகால அரசாங்கத்தினால் வற் வரியை 15 வீதத்திலிருந்து 8 வீதமாக குறைக்கப்பட்டதன் மூலம் இது சாத்தியமானதாக திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இதனடிப்படையில் பல பொருட்களின் விலைகள் எதிர்வரும் தினங்களில் மேலும் குறைவடையும் என்று உள்நாட்டு இறைவரித் திணைக்கள ஆணையாளர் நதுன் குருகே தெரிவித்தார்.

வற் வரி மறுசீரமைப்பு மூலம் வெளிநாட்டு முதலீட்டாளர்களின் நம்பிக்கை மேலும் வலுப்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதனூடாக நாட்டுக்கு பல வெளிநாட்டு முதலீடுகள் கிடைக்கப் பெறும் என பொருளியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

அண்மைக்காலமாக பொருட்களின் விலைகள் சடுதியாக உயர்வடைந்துள்ளமையினால் மக்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.