இன்றைய ராசிபலன் 24.12.2019 இன்று உங்கள் ராசிக்கு என்ன பலன்!

இன்று!

விகாரி வருடம், மார்கழி மாதம் 8ம் தேதி, ரபியுல் ஆகிர் 26ம் தேதி,
24.12.19 செவ்வாய்க்கிழமை, தேய்பிறை, திரயோதசி திதி பகல் 12:48 வரை,
அதன்பின் சதுர்த்தசி திதி, அனுஷம் நட்சத்திரம் மாலை 5:46 வரை,
அதன் பின் கேட்டை நட்சத்திரம், சித்தயோகம்;.

நல்ல நேரம் : காலை 7:30 – 9:00 மணி
ராகு காலம் : பகல் 3:00 – 4:30 மணி
எமகண்டம் : காலை 9:00 – 10:30 மணி
குளிகை : பகல் 12:00 – 1:30 மணி
சூலம் : வடக்கு

தினமும் காலையில் காலண்டரை திகதிப் பார்க்க கிழிக்கிறோமோ இல்லையோ கண்டிப்பாக ராசிப்பலன் பார்க்க கிழிப்போம்.

இன்றைய தினத்தில் நமது ராசிக்கு என்ன பலன் என்பதை பார்ப்பதில் அதிகமானோருக்கு ஆர்வம் இருக்கிறது. அந்த வகையில் இன்று உங்கள் ராசிக்கு என்ன பலன் என்பதை பார்க்கலாம் வாருங்கள்.

மேஷம்

மேஷம்: சந்திராஷ்டமம் தொடர்வதால் தேவையற்ற டென்ஷன் மற்றும் கோபத்தை குறையுங்கள். பிள்ளைகளின் வருங்காலம் குறித்து யோசிப்பீர்கள். தடைப்பட்ட வேலையை முடிக்க முயல்வீர்கள். சிலவற்றிற்கு உங்கள் அவசர முடிவுகள்தான் காரணம் என்பதை உணர்வீர்கள். உத்தியோகத் தில் பிறர் குறைகளை சுட்டிக்காட்ட வேண்டாம். பொறுமை தேவைப்படும் நாள்.

ரிஷபம்

ரிஷபம்: கணவன் – மனைவிக்குள் ஆரோக்கியமான விவாதங்கள் வந்து போகும். புதியவரின் நட்பால் உற்சாகமடைவீர்கள். தாய்வழி உறவினர்களால் மதிக்கப்படுவீர்கள். வேற்றுமதத்தவர் உதவுவார். உத்தியோகத்தில் மேலதிகாரி ஆதரிப்பார். மகிழ்ச்சியான நாள்.

மிதுனம்

மிதுனம்: பணப்புழக்கம் அதிகரிக்கும். பிள்ளைகளால் சமூகத்தில் அந்தஸ்து உயரும். பூர்வீக சொத்து பிரச்சனைகள் தீரும். சிலர் உங்கள் உதவியை நாடுவார்கள். எதிர்பாராத நண்பர்களின் சந்திப்பு நிகழும். உத்தியோகத்தில் உயரதிகாரிகள் அதிசயிக்கும்படி நடந்துக்கொள்வீர்கள். தொட்டது துலங்கும் நாள்.

கடகம்

கடகம்: மற்றவர்களை நம்பி எந்த வேலையையும் ஒப்படைக்க கூடாது என்று முடிவெடுப்பீர்கள். பழைய பிரச்னைகளை தீர்ப்பீர்கள். உறவினர்களில் உண்மையானவர்களை கண்டறிவீர்கள். பயணங்களால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள் உத்தியோகத்தில் சக ஊழியர்களுக்கு உதவுவீர்கள். நினைத்தது நிறைவேறும் நாள்.

சிம்மம்

சிம்மம்: சில வேலைகளை விட்டுக்கொடுத்து முடிப்பீர்கள். வீடு, வாகனபராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். மகளுக்கு நல்லவரன் அமையும். பணப்பற்றாக்குறையை சமாளிப்பீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களின் ஆதரவு கிட்டும். உத்தியோகத்தில் வேலைகளை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். எதிர்பாராத நன்மைகள் உண்டாகும் நாள்.

கன்னி

கன்னி: குடும்பத்தினருடன் சுபநிகழ்ச்சிகளில் கலந்துக்கொள்வீர்கள். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். உறவினர்கள் வீடு தேடிவருவார்கள். சொத்து வாங்குவது விற்பது லாபகரமாக அமையும். வியாபாரத்தில் பற்று வரவு சுமாராக இருக்கும். உத்தியோகத்தில் தலைமைக்கு நெருக்கமாவீர்கள். சாதிக்கும் நாள்.

துலாம்

துலாம்: கணவன் -மனைவிக்குள் மனம் விட்டு பேசுவீர்கள். புதிய முடிவுகளை எடுப்பீர்கள். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்திவரும். நவீன மின்னணு சாதனங்கள் வாங்குவீர்கள். வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் புது ஒப்பந்தம் கையெழுத்தாகும். உத்தியோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள்.மகிழ்ச்சி கிட்டும் நாள்.

விருச்சிகம்

விருச்சிகம்: ராசிக்குள் சந்திரன் இருப்பதால் அக்கம் பக்கம் இருப்பவர்களை அனுசரித்து போங்கள். மற்றவர்களுடன் உங்களை ஒப்பிட்டுக் கொண்டிருக்க வேண்டாம். உங்களின் அனுகுமுறையை மாற்றுங்கள். வியாபாரத்தில் போட்டிகளையும் தாண்டி ஓரளவு லாபம் வரும். உத்தியோகத்தில் உங்கள் முயற்சிகளில் தடைகள் ஏற்படும். பொறுமைத் தேவைப்படும் நாள்.

தனுசு

தனுசு: கணவன் -மனைவிக்குள் அனுசரித்து செல்வது நல்லது. முக்கிய கோப்புகளை கையாளும் போது கவனம் தேவை. சகோதர வகையில் மனக்கசப்புகள் ஏற்படும். வியாபாரத்தில் லாபம் சுமாராக இருக்கும். உத்தியோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். அவசர முடிவுகளை தவிர்க்க வேண்டிய நாள்.

மகரம்

மகரம்: சமயோஜிதமாகவும், சாதுர்யமாகவும் செயல்பட்டு வெற்றி பெறுவீர்கள். உங்கள் பேச்சில் அனுபவ அறிவு வெளிப்படும். உறவினர்களால் ஆதாயம் உண்டு. சேமிக்க வேண்டுமென்ற எண்ணம் வரும். வியாபாரத்தில் புதுத் தொழில் தொடங்கும் முயற்சி வெற்றி அடையும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் பாராட்டுவார்கள். இனிமையான நாள்.

கும்பம்

கும்பம்: பழைய நல்ல சம்பவங்களை நினைவு கூர்ந்து மகிழ்வீர் கள். உடன் பிறந்தவர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். மற்றவர்களுக்காக சில செலவுகளை செய்து மகிழ்வீர்கள். வியாபாரத்தில் பழைய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்தியோகத்தில் உங்களின் திறமைகள் வெளிப்படும். முயற்சிகள் பலிதமாகும் நாள்.

மீனம்

மீனம்: கோபத்தை கட்டுப்படுத்தி உயர்வதற்கான வழியை யோசிப் பீர்கள். குடும்பத்தினருடன் சுபநிகழ்ச்சிகளில் கலந்துக்கொள்வீர்கள். பிள்ளைகள் கேட்டதை வாங்கித் தருவீர்கள். வீடு வாகனத்தை சரி செய்வீர்கள். உறவினர்கள் உங்களைப் புரிந்துக் கொள்வார்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் வரும். உத்தியோகத்தில் தைரியமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். மாற்றங்கள் நிறைந்த நாள்.