முல்லைத்தீவு முள்ளியவளை பிரதேசத்தில் இளைஞர் ஒருவர் தற் கொ லை செய்து கொண்டுள்ளார்.

வீட்டிற்கு அருகில் உள்ள மரம் ஒன்றில் தூ க் கில் தொ ங்கிய நிலையில் இவர் தற் கொ லை செய்து கொண்டுள்ளதாக முள்ளியவளை பொலிஸார் தெரிவித்தனர்.

முள்ளியவளை 04 ஆம் வட்டாரத்தை சேர்ந்த 24 அகவையுடைய ஞானதாஸ் யூட் கிருஷாந் என்ற இளைஞனே இன்று காலை தூ க்கில் தொ ங்கி தற் கொ லைக்கு முயற்சித்துள்ளார்.

சம்வபத்தினை தொடர்ந்து உறவினர்களால் மீட்கப்பட்ட குறித்த இளைஞனை மாவட்ட மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார்கள் அங்கு அவர் உயி ரிழந் துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இளைஞனின் சட லம் மாஞ்சோலை வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைகளுக்காக வைக்கப்பட்டுள்ளது.

முள்ளியவளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். இதேவேளை இளைஞனின் உ யி ரிழப்பிற்கான காரணம் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
