யாழிலிருந்து படகுமூலம் செல்லக்கூடிய அழகான தீவு! மனம் திறந்துள்ள யோசிதவின் பாரியார்!

அழகான தீவு!

யாழ்ப்பாணத்திற்கான தமது பயணத்தின் போதான குறிப்பிடத்தக்க விடயங்களில் ஒன்று யாழ்ப்பாணம் பொது நூலகம் என யோசித ராஜபக்சவின் பாரியார் நிதிஷா ஜயசேகர தெரிவித்துள்ளார்.

பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் இளைய புதல்வர் யோசித்த ராஜபக்ச மற்றும் அவரது பாரியார் யாழ். குடாநாட்டிற்கு நேற்று முன் தினம் விசேட விஜயமொன்றை மேற்கொண்டிருந்தனர்.

இது தொடர்பில் நிதிஷா ஜயசேகர தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவிலேயே யாழ்ப்பாண நூலகம் தொடர்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த பதிவில் மேலும், யாழ்ப்பாணத்திற்கான எமது பயணத்தின் போதான குறிப்பிடத்தக்க விடயங்களில் ஒன்று யாழ்ப்பாணம் நூலகம்.

மக்கள் வாசிக்கும்/கற்றுக்கொள்ளும் இடத்தில் வசீகரத்தைம், கௌரவத்தையும் பாதுகாக்கும் வண்ணம் ஒரு புத்தக காதலராக நீங்கள் நூலகத்திற்குள் நுழைவதற்கு முன்பு உங்கள் காலணிகளை அகற்ற வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதேவேளை யாழ்ப்பாண கோட்டை தொடர்பில் இட்டுள்ள பதிவில், நெடுந்தீவு – வரலாற்று ரீதியான பல சுவடுகளை கொண்ட ஒரு தீவு.

யாழ்ப்பாணத்திலிருந்து படகு மூலம் சென்றடையக் கூடிய ஒரு அழகான தீவு. சுற்றுலாப் பயணிகள் வந்து செல்வதற்கு பல வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளன.

நீங்கள் எப்போதாவது யாழ்ப்பாணம் வந்தால் நிச்சயமாக செல்ல வேண்டிய இடம் நெடுந்தீவு என தெரிவிக்கப்பட்டுள்ளது.