நத்தார் தினமான இன்று யாழில் கடலுக்கு சென்ற ஒரு பிள்ளையின் தந்தை பலி! சோகத்தில் கதறும் மனைவி!

குடும்பஸ்தர் பலி!

யாழ். குருநகர் ஆழ்கடல் சுழிக்குள் சிக்குண்டு ஒரு பிள்ளையின் தந்தையான மீனவரொருவர் பலியாகியுள்ளார். குறித்த சம்பவம் நத்தார் பண்டிகை தினமான இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளது.

சாவக்காட்டு பகுதியைச் சேர்ந்த வடிவேல் வரதன் (வயது 31) என்ற குடும்பஸ்தரே சம்பவத்தில் பலியாகியுள்ளார். உயிரிழந்த குடும்பஸ்தர் உள்ளிட்ட 6 மீனவர்கள் இன்று காலை கடலில் வலை வீச சென்றுள்ளனர்.

அதன்போது, வடிவேல் வரதன் ஆழ்கடலில் சுழி ஓடி வலை வீசியுள்ளார். இதன்பின்னர் சுமார் 10 நிமிடங்கள் வரை அவர் காணாமலிருந்த நிலையில் ஏனைய மீனவர்கள் அவரை தேடியுள்ளனர்.

அப்போது, சுழி இழுத்து இறந்த நிலையில் அவரின் சடலம் மிதந்துள்ளது. இதனையடுத்து யாழ்ப்பாணம் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்ட நிலையில் சடலம் மீட்கப்பட்டு யாழ். போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

மேலும் பிரேத பரிசோதனைக்காக சடலம் யாழ். போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.