ஸ்கூட் ஏர்லைன்ஸ்

சென்னையில் இருந்து சிங்கப்பூர் சென்ற விமானத்தில் விமானி தமிழில் பேசிய ஆடியோ வைரலாகி வரும் நிலையில், தமிழ் அறிவிப்பு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதாக விமானநிறுவனம் தெரிவித்துள்ளது.

சிங்கப்பூரின் ஸ்கூட் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான விமானத்தில் விமானியாக செயல்பட்டு வரும் சரவணன் அய்யாவு என்பவர் தன்னுடைய பேஸ்புக் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார்.
அந்த வீடியோவில் இவர் விமானத்தில் விமானியாக சென்னையில் இருந்து சிங்கப்பூருக்கு சென்ற இடைவெளியின் போது தமிழில் பேசுகிறார். அதில் விமானம் இன்னும் எவ்வளவு நேரங்களில் தரையிரங்கும்? எத்தனை ஆயிரம் அடி உயரத்தில் பறந்து கொண்டிருக்கிறோம்? சென்னைக்கும், சிங்கப்பூருக்கு இருக்கும் நேரம் வித்தியாசம்? காலநிலை போன்றவைகளை குறிப்பிடுகிறார்.

மேலும் அதில், அவர் எனக்கு சிறிய லட்சியம் ஒன்று இருந்தந்து. அதாவது விமானத்தில் ஆங்கிலத்தை தொடர்ந்து, தமிழிலும் அறிவிக்க வேண்டும் என்பது தான், இதற்கு அனுமதி அளித்த கேப்டன் மற்றும் எனக்கு உதவிய கேபின் குழுவினருக்கு நன்றி என்று தெரிவித்துள்ளார்.

இது குறித்து விமான நிறுவனம் கூறுகையில், விமானம் தரையிரங்கும் முன்னர் அறிவிப்புகள் சில கூறுவோம், அதை அவ்வப்போது நான்கு மொழிகளில் முன்பதிவு செய்வது சிரமம், ஆனால் விமானி சரவணன் தமிழ்ப் படைப்பாளராக அனுபவம் இருந்ததால், தமிழில் அறிவிக்கும் அவருடைய கோரிக்கைக்கு அனுமதி வழங்கப்பட்டதாக தெரிவித்துள்ளது.
