ஆட்டோ சாரதியை பலியெடுத்தது கோர விபத்து!!- படங்கள்!

கோர விபத்து

நானுஓயா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பங்களாஅத்த பகுதியில் இன்று (26) இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் பலியாகியுள்ளார்.

ஹட்டனிலிருந்து நுவரெலியாவை நோக்கி சென்ற வேனுடன், நுவரெலியாவிலிருந்து நானுஓயா பகுதியை நோக்கிவந்த ஆட்டோ நேருக்கு நேர் மோதியதாலேயே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் ஆட்டோ ஓட்டுநரே வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளார்.

விபத்தில் உயிரிழந்த நபர் நானுஓயா பகுதியை சேர்ந்த 65 வயதுடைய ஆரியபால என அடையாளம் காணப்பட்டுள்ளார். வேன் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.