சூரியக்கிரகணத்தில் ஆலமரத்தின் மேல் பட்ட ஒளியால் நடந்த ஆச்சரிய நிகழ்வு! பிரமிக்க வைக்கும் வீடியோ!

சூரியக்கிரகணத்தின் போது தமிழகத்தில் கடலூரில் நடந்த வித்தியாசமான நிகழ்வின் வீடியோ வைரலாகியுள்ளது.

சூரியனுக்கும் பூமிக்கு இடையில் நிலவு வரும்போது, அது சூரியனை மறைக்கிறது. இதனால், நிலவின் நிழல் பூமியில் விழும்போது, சூரியன் மறைந்துபோகிறது. இதைத்தான் சூரியக்கிரகணம் என்று அழைக்கிறோம்.

இலங்கை, இந்தியா, உள்ளிட்ட நாடுகளில் சூரியக்கிரகணம் தொடங்கியுள்ளது.

இந்நிலையில் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் கடலூர் சார்பாக வளைய சூரிய கிரகணத்தை காணும் நிகழ்வு கடலூர் வெள்ளி கடற்கரையில் ஏற்ப்பாடு செய்யப்பட்டிருந்தது.

60 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஏற்படும் இந்த அறிய நிகழ்வை காண கடலூர் வெள்ளி கடற்கரையில் மாணவர்கள் , பெற்றோர்கள், பொதுமக்கள் குவிந்தனர்.

கடலூரில் அபூர்வ சூரிய கிரகண நிகழ்வின் போது மரத்தின் அடியில் நிலா போன்று நிழல்கள் பிரதிபலித்தது ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

மேலும் அனைவரும் காணும் நோக்கில் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் கடலூர் சார்பாக தொலைநோக்கி, சூரிய வடிகட்டி கண்ணாடி, பிம்ப பிரதிபலிப்பு முறைகளில் கிரகணத்தை பார்வையிட்டு வருகின்றனர்

தொடர்நது கடலூர் பெரியார் கல்லூரி முன்பு உள்ள ஆலமரத்தின் மேல்பட்ட கிரகண ஒளியால் தரை முழுவதும் நிலா வடிவத்தில் நிழல் பிரதிபலித்தது. இந்த காட்சி காண்ப்போரை பிரமிப்பில் ஆழ்த்தியுள்ளது.