நீண்ட நாள் நோயின்றி வாழ பயனுள்ள பாட்டி வைத்தியம் இதோ!

பாட்டி வைத்தியம்

ஆங்கில மருந்துகளை விட உடல் உபாதைகளுக்கு விரைவில் நிவாரணம் தரக்கூடிய அந்த காலத்தில் நமது முன்னோர்கள் கையாண்டு வந்த சில எளிய பாட்டி வைத்திய குறிப்புக்கள் பல உள்ளன. தற்போது சிலவற்றை இங்கு பார்ப்போம்.

சிறுநீர்ப்பையில் தொற்று நோய் ஏற்பட்டவர்கள் இரண்டு ஸ்பூன் பட்டைத் தூள், ஒரு ஸ்பூன் தேனை ஒரு டம்ளர் வெதுவெதுப்பான தண்ணீரில் கலந்து குடித்து வந்தால், சிறுநீர்ப்பையில் உள்ள கிருமிகள் அழியும். தொற்று நோய் ஏற்படாமல் பாதுகாக்கும்.

குளிக்கும் முன் காய்ச்சிய ஆலிவ் எண்ணெயில் ஒரு ஸ்பூன் தேன் மற்றும் ஒரு டீஸ்பூன் பட்டைத் தூளை கலந்து தலைமுடியில் தடவி 15 நிமிடங்கள் கழித்து அலசினால் முடி உதிர்வது குறையும்.

ஒரு ஸ்பூன் பட்டைத் தூளை 5 ஸ்பூன் தேனுடன் கலந்து அதை வலியுள்ள பல்லில் தினமும் மூன்று முறை தடவி வந்தால் வலி இருந்த இடம் தெரியாமல் காணாமல் போகும்.

2 ஸ்பூன் தேன், 3 ஸ்பூன் பட்டைத் தூளை அரை டம்ளர் பால் கலக்காத டீ தண்ணீரில் கலந்து குடிக்க வேண்டும். இப்படி செய்து வந்தால், ரத்தத்தில் கொழுப்பின் அளவு குறையும்.

வயதானவர்கள், நீரிழிவு பிரச்சனை உள்ளவர்களுக்கு மூட்டு வலியால் அவதிப்படுவதுண்டு. இவர்கள் ஒரு ஸ்பூன் தேனை இரண்டு ஸ்பூன் வெதுவெதுப்பான நீரில் கலந்து அதனுடன் கொஞ்சம் பட்டைத் தூளை சேர்த்து குழைத்து வலி யுள்ள இடத்தில் தடவி மெது வாக மசாஜ் செய்து வந்தால், வலி குறையும்.

ஒரு கப் சுடு தண்ணீரில் இரண்டு டீஸ்பூன் தேன் மற்றும் பட்டைத் தூளை சேர்த்து காலை மற்றும் இரவு நேரத்தில் சாப்பிடலாம். தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் ஆர்த்ரடிஸ் குணமாகும்.