கின்னஸ் சாதனைக்கு தயாராகும் இலங்கை இரட்டையர்கள்!!

இலங்கை இரட்டையர்கள்

உலகின் மிகப்பெரிய இரண்டைகள் ஒன்றுக்கூடல் ஒன்றை உருவாக்கி 2020ஆம் ஆண்டு ஜனவரி மாதம் உலக கின்னஸ் சாதனை ஒன்றை படைப்பதற்கு இலங்கை இரட்டைகள் அமைப்பு ஆயத்தமாகியுள்ளது.

அவர்கள் Sri Lanka Twins என அடையாளப்படுத்தப்பட்டுள்ளதாக, இலங்கை இரட்டையர்கள் அமைப்பு தெரிவித்துள்ளது.

எதிர்வரும் ஜனவரி மாதம் கொழும்பு சுகததாஸ உள்ளகரங்கில் இடம்பெறும் இலங்கை இரட்டையர்கள் மாநாட்டில் இந்த சாதனை படைக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதற்காக உத்தியோபூர்வ அழைப்பிதழை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நேற்று அலரி மாளிகையில் வைத்து ஏற்றுக் கொண்டுள்ளார்.

இலங்கையின் 24 மாவட்டங்களை சேர்ந்த 28000 இரட்டையர்களுடன் ஒன்றுகூடலை நடத்த எதிர்பார்க்கப்பட்டுள்ளது.