ஜனாதிபதி

கோட்டாபய ராஜபக்ஷ நேற்று கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக போதனா வைத்தியசாலைக்கு திடீர் விஜயம் மேற்கொண்டுள்ளார்.
அங்குள்ள அனைத்து சிகிச்சை மையங்கள் மற்றும் சத்திரசிகிச்சை கூடங்களையும் ஜனாதிபதி பரிசோதனை செய்துள்ளார்.
வைத்தியசாலை ஊழியர் சபையுடன் மேற்கொண்ட கலந்துரையாடலின் போது அங்குள்ள குறைநிறைகள் தொடர்பில் ஆராயப்பட்டுள்ளது.

68 வைத்தியர்கள் தேவையாக உள்ள நிலையில் 20 சாதாரண வைத்தியர்களே தங்கள் கடமைகளை செய்வதாக முறைப்பாடு செய்யப்பட்டது.
இதன்போது போதனா வைத்தியசாலை முழுமையாக இயங்கும் வகையில் அங்குள்ள அனைத்து குறைபாடுகளையும் விரைவாக தீர்த்து வைக்குமாறு ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார்.
