கணிதம் மற்றும் வர்த்தக பிரிவிலும் யாழ். இந்து கல்லூரி மாணவர்கள் சாதனை!

2019ம் ஆண்டிற்கான க.பொ.த உயர்தர பரீட்சைக்கான பெறுபேறுகள் இன்று மாலை வெளியிடப்பட்டுள்ளன.

வெளியாகியுள்ள முடிவுகளின் அடிப்படையில், கணிதம் மற்றும் வர்த்தக பிரிவிலும் யாழ். இந்து கல்லூரி மாணவர்கள் சிறந்த பெறுபேறுகளை பெற்றுக்கொண்டுள்ளனர்.

இதன்படி, வர்த்தகப் பிரிவில் யாழ். இந்துக் கல்லூரியைச் சேர்ந்த சிவானந்தம் ரகுராஜ் எனும் மாணவன் யாழ். மாவட்டத்தில் முதலிடத்தையும், அகில இலங்கை ரீதியில் 107வது இடத்தையும் பெற்றுள்ளார்.

கணிதப்பிரிவிலும், யாழ். இந்துக் கல்லூரியைச் சேர்ந்த ரவீந்திரா யதுசன் எனும் மாணவன் யாழ். மாவட்டத்தில் முதல் இடத்தையும், அகில இலங்கை ரீதியில் 12ம் இடத்தையும் பெற்றுள்ளார்.

இதேவேளை, உயிரியல் (bio) பிரிவில் யாழ். இந்துக்கல்லூரி மாணவன் கிருஷிகன் ஜெயனாந்தராசா அகில இலங்கை ரீதியில் இரண்டாம் இடத்தை பெற்று சாதனை படைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.