கிளிநொச்சி மத்திய மகா வித்தியாலய மாணவி சாதனை!

கிளிநொச்சி

மாவட்டத்தில் உயிர் முறைமைகள் தொழில்நுட்பப் பிரிவில் கிளிநொச்சி மத்திய மகா வித்தியாலய மாணவி முதலாம் இடத்தைப் பெற்றுள்ளார்.

இவ்வருடம் ஓகஸ்ட் மாதம் நடைபெற்ற ஜி.சீ.ஈ. உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் நேற்றிரவு வெளியிடப்பட்டன.

அந்தவகையில் கிளிநொச்சி மாவட்டத்தில் உயிர் முறைமைகள் தொழில்நுட்பப் பிரிவில் கிளிநொச்சி மத்திய மகா வித்தியாலய மாணவி சுவாகி சுந்தரமூர்த்தி 2 பி, 1 C பெறுபேறு பெற்றுள்ளார்.

இவர் கிளிநொச்சி மாவட்டத்தில் முதல் நிலையையும் அகில இலங்கை ரீதியில் 31 ஆவது இடத்தையும் பெற்றுள்ளார்.