முல்லைத்தீவு மாவட்டத்தில் கணித பிரிவில் சாதனை படைத்த மாணவன்!

க.பொ.த உயர்த பரீட்சை

இந்த வருடம் இடம்பெற்ற க.பொ.த உயர்த பரீட்சை பெறுபேறுகள் நேற்றைய தினம் (27-12-2019) பிற்பகல் பரீட்சை திணைக்களத்தால் வெளியிடப்பட்டது.

வெளியான பெறுபேறுகளின்படி கணித பிரிவில் முல்லைத்தீவு வித்தியானந்தா கல்லூரி மாணவன் மாவட்ட ரீதியில் முதல் இடத்தை பெற்றுள்ளார்.

முல்லைத்தீவு வித்தியானந்தா கல்லூரியில் கல்வி கற்ற ராஜரட்ணம் சஞ்ஜித் என்னும் மாணவனே இவ்வாறு மாவட்ட ரீதியில் முதல் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.

கடந்த ஓகஸ்ட் 5ஆம் திகதி முதல் ஓகஸ்ட் 31ஆம் திகதி வரை நடைபெற்ற க.பொ.த. உயர்தர பரீட்சையில் 337,704 பரீட்சார்த்திகள் தோற்றியிருந்தனர்.

அவர்களில் ஒரு லட்சத்து 81 ஆயிரத்து 126 பரீட்சார்த்திகள் பல்கலைக்கழகத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன் 71 பரீட்சார்த்திகளின் பெறுபேறுகள் இரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.