திருநாவுக்கரசு ஜீவறதன்

இந்த வருடம் இடம்பெற்ற க.பொ.த உயர்த பரீட்சை பெறுபேறுகள் நேற்று (27.12.2019) பிற்பகல் பரீட்சை திணைக்களத்தால் வெளியிடப்பட்டது.

வெளியான பெறுபேறுகளின்படி முல்லைத்தீவு வித்தியானந்தா கல்லூரி மாணவன் தொழில்நுட்ப பிரிவில் முல்லைத்தீவு மாவட்டத்தில் இரண்டாம் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.

முள்ளியவளை வித்தியானந்தா கல்லூரியில் கல்வி கற்ற திருநாவுக்கரசு ஜீவறதன் என்ற மாணவனே இவ்வாறு தொழில்நுட்ப பிரிவில் முல்லைத்தீவு மாவட்டத்தில் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளார்.

கடந்த ஓகஸ்ட் 5ஆம் திகதி முதல் ஓகஸ்ட் 31ஆம் திகதி வரை நடைபெற்ற க.பொ.த. உயர்தர பரீட்சையில் 337,704 பரீட்சார்த்திகள் தோற்றியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

