முல்லைத்தீவில்

இறுதி யுத்தத்தில் தந்தையை இழந்த சுப்பிரமணியம் சுடர் நிலா என்ற மாணவி கலைப் பிரிவில் முதல் நிலை பெற்று சாதனை படைத்துள்ளார்.
முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட கெருடமடு மடுக்கரை பகுதியில் வசித்து வருகின்ற குறித்த மாணவி இறுதி யுத்தத்தின் போது தனது தந்தையாரை இழந்துள்ளார்.
அவருடைய தங்கை 2021 கலைப்பிரிவில் கல்வி கற்கின்ற நிலையில் குறித்த மாணவியின் அண்ணா மேசன் வேலை செய்து தன்னுடைய தங்கைகள் இருவரையும் மிகுந்த கஷ்டத்தின் மத்தியில் கற்பித்து வருகின்றார்.
இந்நிலையில் 3A சித்தி பெற்று சாதித்துள்ள குறித்த மாணவியை மனதார வாழ்த்துவதுடன் பல்கலைக்கழக கல்விக்கு உதவிட நல்லுள்ளம் கொண்டவர்கள் முன்வருமாறு கோரிக்கை விடப்பட்டுள்ளது.

இறுதி யுத்தத்தில் தந்தையரை இழந்தவர்கள் ஆயினும் விடா முயற்சியும் தன்னம்பிக்கையும் கொண்டு பீனிக்ஸ் பறவைகளாய் எழுந்து சாதனை படைத்துள்ளனர்.
புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரி மாணவிகளான செல்வி ர.யாழினி வர்த்தகப் பிரிவு 3A மாவட்டநிலை-1, தேவிபுரம் செல்வி சு.சுடர்நிலா கலைப்பிரிவு 3A மாவட்டநிலை-1 கெருடமடு மடுக்கரை. கல்விக்கு வறுமை ஒரு தடையில்லை என்பதற்கு எடுத்துக் காட்டாக இவர்கள் விளங்குகின்றார்கள் என புதுக்குடியிருப்பு கல்விச் சமூகத்தினர் பாராட்டுத் தெரிவித்து வருகின்றனர்.
