வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கபட்ட 2000 குடும்பங்களுக்கு தலா ரூ.30 ஆயிரம் வழங்க சர்வதேச செஞ்சிலுவை செம்பிறை சங்கங்களின் சம்மேளனம் அனுமதி!!

வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கபட்ட மக்களுக்கு நிவாரண உதவி !

சர்வதேச செஞ்சிலுவை செம்பிறை சங்கங்களின் சம்மேளனம் (IFRC) அனர்த்த நிவாரண அவசரநிலை நிதியிலிருந்து (DREF) 592,000 சுவிஸ்பிராங் (Swiss Franc) னை இலங்கையில் அண்மைய வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 3 மாவட்டங்களுக்கு அவசர நிவாரண உதவிகளை வழங்க அனுமதியளித்துள்ளது.

இலங்கை செஞ்சிலுவைச் சங்கம் (SLRCS) இதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. 3 மாவடங்களிலும் மிக கடுமையாக பாதிக்கபட்ட 2000 குடும்பங்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கப்படவிருக்கின்றது.

ஆரம்ப உடனடி உதவியாக வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட 2000 குடும்பங்களுக்கு தலா ரூ 30,000 வழங்கப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.