இன்றைய 30.12.2019 இன்று உங்கள் ராசிக்கு என்ன பலன்! 12 ராசிகளுக்கும் துல்லிய கணிப்பு!

இன்று!

விகாரி வருடம், மார்கழி மாதம் 14ம் தேதி, ஜமாதுல் அவ்வல் 3ம் தேதி,
30.12.19 திங்கட்கிழமை, வளர்பிறை, சதுர்த்தி திதி பகல் 2:26 வரை,
அதன் பின் பஞ்சமி திதி, அவிட்டம் நட்சத்திரம் இரவு 11:29 வரை,
அதன் பின் சதயம் நட்சத்திரம், சித்தயோகம்.

நல்ல நேரம் : காலை 6:00 – 7:30 மணி
ராகு காலம் : காலை 7:30 – 9:00 மணி
எமகண்டம் : காலை 10:30 – 12:00 மணி
குளிகை : பகல் 1:30 – 3:00 மணி
சூலம் : கிழக்கு

தினமும் காலையில் காலண்டரை திகதிப் பார்க்க கிழிக்கிறோமோ இல்லையோ கண்டிப்பாக ராசிப்பலன் பார்க்க கிழிப்போம்.

இன்றைய தினத்தில் நமது ராசிக்கு என்ன பலன் என்பதை பார்ப்பதில் அதிகமானோருக்கு ஆர்வம் இருக்கிறது. அந்த வகையில் இன்று உங்கள் ராசிக்கு என்ன பலன் என்பதை பார்க்கலாம் வாருங்கள்.

மேஷம்

மேஷம்: நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். உறவினர்கள் நண்பர்கள் உங்கள் உதவியை நடுவார்கள். எதிர்பாராத சந்திப்பு நேரிடும். பிரபலங்களில் அறிமுகம் கிடைக்கும். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்தியோகத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். முயற்சியால் முன்னேறும் நாள்.

ரிஷபம்

ரிஷபம்: சின்ன சின்ன சந்தர்ப்பங்களையும் வாய்ப்புகளையும் சரியாக பயன்படுத்தி முன்னேறுவீர்கள். பெற்றோரின் ஆதரவும் கிடைக்கும். மனைவி வழியில் ஒத்துழைப்பு உண்டு. காணாமல் போன முக்கிய ஆவணங்கள் கிடைக்கும். வியாபாரத்தில் புதிய முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் பாராட்டுவார்கள். காரிய சாதனை செய்யும் நாள்.

மிதுனம்

மிதுனம்: கடந்த இரண்டு நாட்களாக இருந்த சோர்வுகள் நீங்கி துடிப்புடன் செயல்படுவீர்கள். குடும்பத்தில் நிம்மதி கிடைக்கும். கேட்ட கிடைக்கும் இடத்தில் உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் புதிய முதலீடு செய்யலாம். வியாபாரத்தில் புதிய தொடர்புகள் ஏற்படும். மனசாட்சிபடி செயல்படும் நாள்.

கடகம்

கடகம்: பிள்ளைகளுக்கு தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். கல்யாண முயற்சிகள் சாதகமாக அமையும். வியாபாரத்தில் பங்குதாரர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். உத்தியோகத்தில் மூத்த அதிகாரிகள் முக்கிய அறிவுரைத் தருவார்கள். நன்மை கிட்டும் நாள்

சிம்மம்

சிம்மம்: சந்திராஷ்டமம் தொடர்வதால் எதிர்பார்ப்புகள் தாமதமாகி முடியும். உங்களுடைய தனிப்பட்ட ரகசியங்களை வெளியில் சொல்ல வேண்டாம். சாலைகளை கவனமாக கடந்துச் செல்லுங்கள். உத்யோகத்தில் மறைமுக நெருக்கடிகள் வந்து நீங்கும். முன்கோபத்தை தவிர்க்க வேண்டிய நாள்.

கன்னி

கன்னி: பணப்புழக்கம் அதிகரிக்கும். மக்கள் மத்தியில் செல்வாக்கு உயரும். உடல் நலத்தில் கவனம் தேவை. அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். வியாபாரத்தில் எதிர்பாராத தனலாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் உயரதிகாரிகள் அதிசயிக்கும்படி நடந்து கொள்வீர்கள். அமைதியான நாள்.

துலாம்

துலாம்: வருங்காலத் திட்டத்தில் ஒன்று நிறைவேறும் . பிள்ளைகளின் தனித் திறமைகளை கண்டறிந்து முன்னேறுவீர்கள். மனைவி வழியில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். சிக்கனமாக செலவழிக்க தொடங்குவீர்கள். வியாபாரத்தில் சில சூட்சுமங்களைப் புரிந்து கொள்வீர்கள். உத்யோகத்தில் புது வாய்ப்புகள் தேடி வரும். கனவு நனவாகும் நாள்.

விருச்சிகம்

விருச்சிகம்: பிரியமானவர்களின் சந்திப்பு நிகழும். பழைய கடனைத் தீர்க்க முயற்சி செய்வீர்கள். வீடு வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். இழுபறியாக இருந்த வேலைகள் உடனே முடியும். பயணங்களால் ஆதாயம் உண்டு. உத்யோகத்தில் சூழ்ச்சிகளை தாண்டி முன்னேறுவீர்கள். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் நாள்.

தனுசு

தனுசு: திட்டவட்டமாக சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்களின் பிரச்சினையை தீர்த்து வைப்பீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். அரசால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் அதிரடியான திட்டங்களை தீட்டுவீர்கள். உத்தியோகத்தில் தலைமைக்கு நெருக்கமாவீர்கள். வெற்றி பெறும் நாள்.

மகரம்

மகரம்: கடந்த இரண்டு நாட்களாக கணவன்-மனைவிக்குள் இருந்த மோதல்கள் விலகும். இழுபறியாக இருந்த வேலைகள் உடனே முடியும். புதியவர்களின் நட்பும் கிடைக்கும் நீண்ட நாள் பிரச்னைகளுக்கு தீர்வு காண்பீர்கள். வியாபாரத்தில் போட்டிகள் குறையும். உத்தியோகத்தில் உயர்வு உண்டாகும். உற்சாகமான நாள்.

கும்பம்

கும்பம்: ராசிக்குள் சந்திரன் இருப்பதால் ஓய்வு எடுக்க முடியாதபடி வேலைச்சுமை அதிகரிக்கும். குடும்பத்தாருடன் இணக்கமாக செல்லவும். மற்றவர்கள் சுட்டிக் காட்டுவதன் மூலம் சச்சரவுகளில் சிக்குவீர்கள். உத்தியோகத்தில் வளைந்து கொடுத்து போவது நல்லது. இடம் பொருள் ஏவல் அறிந்து செயல் பட வேண்டிய நாள்.

மீனம்

மீனம்: சில காரியங்களை அலைந்து திரிந்து முடிக்க வேண்டி இருக்கும். உடன் பிறந்தவர்களால் அலைச்சல் வீண் செலவுகள் வந்துபோகும். தாழ்வுமனப்பான்மை வந்து நீங்கும். உடல் நலத்தில் கவனம் தேவை. உத்தியோகத்தில் சக ஊழியர்களிடம் விவாதம் வேண்டாம். போராடி வெல்லும் நாள்.