ஒரே வீட்டில் இருந்து 5 சிறுவர், சிறுமிகள் உள்ளிட்ட ஆறு பேரின் சடலங்கள் மீட்பு! கதறி அழுத உறவினர்கள்!

இந்தியா

இந்தியாவில் குறைந்த மின்னழுத்தம் காரணமாக ஏற்பட்ட விபத்தில் வீட்டில் இருந்து ஐந்து சிறார்கள் உள்ளிட்ட ஆறு பேர் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளனர்.

உத்தரபிரதேச மாநிலத்தின் Ghaziabad-ன் Loni நகரில் உள்ள ஒரு வீட்டில் தான் இந்த துயர சம்பவம் நடந்துள்ளது.

வீட்டில் இருந்த பிரிட்ஜ் குறைந்த மின்னழுத்தம் காரணமாக தீப்பிடித்து எரிந்து நிலையில் அதன் மூலம் மின்சாரம் தாக்கி பர்வீன் (40), பாத்திமா (12), ஷாயிமா (10), ரதியா (8), அப்துல் அசீம் (8) மற்றும் அப்துல் அகத் (5) ஆகியோர் உயிரிழந்துள்ளனர்.

வீடு முழுவதும் நெருப்பு பரவியதால் அவர்களால் தப்பிக்க முடியவில்லை என கூறப்படுகிறது.

இந்த சம்பவத்தில் பிரிட்ஜ் முழுவதுமாக தீப்பிடித்து சாம்பலாக ஆனதாக தெரியவந்துள்ளது. உயிரிழந்த ஆறு பேரின் சடலங்களையும் பொலிசார் கைப்பற்றி விசாரணை நடத்தி வரும் நிலையில் கூடுதல் தகவல்கள் விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.