பிரசவ வ லியால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பெண்ணுக்கு நேர்ந்த கதி!!

தமிழகத்தில்

செவிலியர் பிரசவம் பார்த்ததால், தாயும், குழந்தையும் உ யிரிழந்ததாக கூறி, அரசு மருத்துவமனையை குடும்பத்தினர் மற்றும் உறவினர் முற்றுகை போ ராட்டத்தில் ஈடுபட்டதால், அங்கு சிறிது நேரம் ப ரபரப்பு நிலவியது.

ராமநாதபுரம் ஆர்.எஸ்.மடை பகுதியைச் சேர்ந்தவர் முருகேசன். இவர் கீர்த்தீகா என்ற பெண்ணை திருமணம் செய்து வாழ்ந்து வந்துள்ளார்.

இந்நிலையில் கீர்த்திகா கர்ப்பமானதால், அவர் தொடர்ந்து மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்று வந்துள்ளார். இதையடுத்து திடீரென்று கீர்த்திகாவுக்கு பிரசவ வலி ஏற்பட்டதால் நேற்றிரவு கீர்த்திகா அங்கிருக்கும் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அப்போது அங்கு மருத்துவர் இல்லாததால் செவிலியர் பிரசவம் பார்த்துள்ளார். இதனால், ஆண் குழந்தை இ றந்த நிலையில் பிறந்ததாகவும் சில நிமிடங்களிலேயே தாய் கீர்த்திகாவும் உ யிரிழந்துள்ளார்.

இதைக் கேட்டு அ திர்ச்சியடைந்த கீர்த்திகாவுன் குடும்பத்தினர், செவிலியர் பிரசவம் பார்த்ததாலேயே உ யிரிழப்பு நேரிட்டதாக கூறி, அதிகாலையில் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் மருத்துமனையை முற்றுகையிட்டு போ ராட்டத்தில் ஈடுபட்டதால், அங்கு ப ரபரப்பு நிலவியது.

இதையடுத்து இது குறித்த தகவல் உடனடியாக பொலிசாருக்கு தெரிவிக்க விரைந்து வந்த பொலிசார் இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருவதாகவும், கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறிய பின்னரே போ ராட்டம் முடிவுக்கு வந்தது. பொலிசார் கீர்த்திகாவின் மரணம் குறித்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.