2020 ஆம் ஆண்டு எந்த எண்ணில் பிறந்தவர்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை பொழியப் போகுதுமாம்!

எண் பலன்கள்

2020 ஆண்டு எந்த எண்ணில் பிறந்தவர்களுக்கு என்னென்ன பலன்களைத் தரப்போகிறது என்று பார்க்கலாம்.

1 எண்
2020ஆம் ஆண்டு 1ஆம் எண் காரர்களுக்கு அற்புதமான ஆண்டாக அமைந்துள்ளது.

சிறப்பான ஆண்டு காரணம் சூரியன் ஆதிக்கம் கொண்ட இந்த எண்ணிற்கு 2020 நன்மைகளையே செய்யும்.

தொழிலில் மேன்மை கிடைக்கும், பெண்களுக்கு ஆடை ஆபரணம் சேரும் வயது முதிர்ந்தவர்களுக்கு நோய் நொடிகள் நீங்கும்.

ஸ்ரீரங்கம் சென்று ஸ்ரீரங்கநாதரை தரிசனம் செய்யலாம். திருவண்ணாமலை கிரிவலம் வரலாம்.

2 எண்
சந்திரனை ஆதிக்கமாகக் கொண்ட 2ஆம் எண்ணில் பிறந்தவர்களுக்கு அமோகமான ஆண்டாக அமைந்துள்ளது.

திருமணம் நடைபெறாதவர்களுக்கு திருமணம் நடைபெறும் புத்திர பாக்கியம் தாமதப்பட்டவர்களுக்கு புத்திரபாக்கியம் கிடைக்கும்.

மாணவர்களுக்கு மகத்தான ஆண்டாக அமையும் கூத்தனூர் சென்று சரஸ்வதியை தரிசனம் செய்து விட்டு வாருங்கள் நல்லதே நடக்கும்.

பொற்காலமான ஆண்டாக அமையும், திங்களூர் சந்திரன் கோவில் வழிபாடு கீழப்பெரும்பள்ளம் கேது பகவானை வணங்கலாம்.

3 எண்
குருவின் ஆதிக்கம் நிறைந்த 3ஆம் எண்ணில் பிறந்தவர்களுக்கு இந்த ஆண்டு சற்றே சோதனைகள் நிறைந்த ஆண்டுதான். பயணங்கள் செல்லும் போது விநாயகரை வணங்கி விட்டு செல்லுங்கள்.

திருச்செந்தூர் சென்று முருகப்பெருமானை வணங்கி வாருங்கள். ஆஞ்சநேயரை தரிசனம் செய்வது சிறப்பு.

வாரந்தோறும் வியாழக்கிழமைகளில் குருபகவானை தரிசனம் செய்வது சிறப்பு.

4 எண்
ராகுவின் ஆதிக்கம் நிறைந்த 4ஆம் எண்ணில் பிறந்தவர்களுக்கு 2020 செழிப்பான ஆண்டு. பலதரப்பட்ட வருமானங்கள் வரும் உழைப்பு அதிகமாகும். உழைப்புக்கு ஏற்ப பலன் கிடைக்கும்.

இந்த ஆண்டு சுபமான காரியங்களில் முதலீடு செய்யலாம். சொத்துக்கள் வாங்கலாம்.

வீடு மனை வாங்கலாம். பட்டீஸ்வரம் துர்க்கையை வழிபடலாம். ராகு காலத்தில் துர்க்கா தேவியை வணங்கலாம்.

செவ்வாய்கிழமைகளில் துர்க்கையை வணங்குங்கள். சோதனைகளை சமாளித்து விடுங்கள்

5 எண்
ஐந்தாம் எண்ணில் பிறந்தவர்கள் அதிர்ஷ்டம் நிறைந்தவர்கள். சுப விரையங்கள் நடைபெறும்.

குபேரன் அருள் கிடைக்கும். புதன்கிழமைகளில் திருவெண்காடு சென்று வணங்கி வரலாம்.

மதுரை மீனாட்சி சொக்கநாதரை புதன்கிழமைகளில் வணங்கி அர்ச்சனை செய்யலாம். தொழில் முன்னேற்றம் ஏற்படும்.

6 எண்
சுக்கிரன் ஆதிக்கம் பெற்றவர்கள். இனிமையானவர்கள். ரியல் எஸ்டேட் துறையில் இருப்பவர்களுக்கு நல்ல விமோசனம் கிடைக்கும்.

வெளிநாடுகளில் நல்ல வேலை கிடைக்கும். மாணவர்களுக்கு கல்விச்செல்வம் சிறப்பாக அமையும் செழிப்பாக அமையும்.

ஸ்ரீதன்வந்திரி பீடத்தில் எழுந்தருளி அருள்பாலிக்கும் ஆரோக்கியலட்சுமி தாயாரை வணங்க நன்மைகள் நடைபெறும்.

7 எண்
கேதுவின் சாரம் பெற்ற 7 ஆம் எண்ணில் பிறந்தவர்களுக்கு 2020ஆம் ஆண்டில் சோதனைகள் வந்தாலும் அதனை சாதனைகளாக மாற்றலாம்.

திருமண வாழ்க்கையில் கவனமாக இருக்க வேண்டும்.

காஞ்சிபுரத்தில் சித்திரகுப்தனை வழிபடலாம். கேதுவின் நாயகன் சித்திரகுப்தனை வணங்குவதால் வருடம் முழுவதும் சாதனைகள் படைக்கலாம்.

கற்பக விநாயகரை வணங்கலாம். சனிக்கிழமைகள் தோறும் விநாயகரை வணங்கலாம். அருகில் உள்ள ஐயப்பன் கோவிலை சென்று வணங்குங்கள். விரயங்களை தவிர்க்கலாம்.

8 எண்
எட்டாம் எண் மகத்தான எண் சக்தி வாய்ந்த எண் எனவே இந்த எண் காரர்களுக்கு அற்புதமானதாக அமையும்.

8ஆம் எண்ணின் கூட்டுத்தொகையில் பிறந்தவர்களுக்கு 2020ஆம் ஆண்டு நன்மைகள் தீமைகள் சரியாக கலந்த ஆண்டு சனியும் ராகுவும் இணைந்தால் எப்படி இருக்கும்.

சனி பகவானை சணிக்கிழமையில் வணங்குங்கள். சனிக்கிழமையன்று ஆஞ்சநேயரை வணங்குங்கள்.

ஆஞ்சநேயர் கோவிலுக்கும் திருப்பதிக்கு சென்று ஏழுமலையானை வணங்கி வரலாம்.

9 எண்
செவ்வாய் ஆதிக்கம் நிறைந்த 9 ஆம் எண்ணில் பிறந்தவர்களுக்கு பொற்காலமான ஆண்டாக அமைந்துள்ளது.

நிறைய வெற்றிகள் கிடைக்கும். அரசு துறையில் இருப்பவர்களுக்கும், காவல்துறை, தீயணைப்புத்துறை, ராணுவத்துறையில் இருப்பவர்களுக்கு மகத்தான ஆண்டாக அமையும் வெற்றியை நோக்கி செல்வார்கள்.

எதற்கும் டென்சன் ஆகாதீங்க கோபத்தை கட்டுப்படுத்தினால் நிறைய வெற்றிகள் தேடி வரும்.

பதவி உயர்வு வரும். பெண்களுக்கு சக்தி நிறைந்த ஆண்டு. கலைத்துறையில் இருப்பவர்களுக்கு வாய்ப்புகளும் வருமானமும் தேடி வரும்.

தன்வந்திரி பகவானை வணங்குங்கள். வைத்தீஸ்வரன் கோவிலுக்குப் போய் வழிபடுங்கள். அங்குள்ள முத்துக்குமாரசாமியை வணங்க நன்மைகள் நடைபெறும்.