வடக்கு மாகாண ஆளுநராக பதவிப்பிரமாணம் செய்தார் திருமதி சார்ள்ஸ் !

பி.எஸ்.எம்.சார்ள்ஸ்

இலங்கை நிர்வாக சேவையின் விசேட தர அதிகாரியான திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் வட மாகாண ஆளுநராக இன்று (30) நண்பகல் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்தார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையில் அண்மையில் இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் போது வட மாகாண ஆளுநர் தொடர்பில் தீவிர அவதானம் செலுத்தப்பட்டிருந்தது.

சுகாதாரம், சுதேச மருத்துவத் துறை அமைச்சின் செயலாளராகவும் இலங்கை சுங்கத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகமாகவும் பணியாற்றியுள்ள அவர், மட்டக்களப்பு மற்றும் வவுனியா மாவட்டங்களின் மாவட்ட செயலாளராக நீண்டகாலம் சேவையாற்றியுள்ளார்.

விரைவில் வடக்கு மாகாணம் சென்று கடமைகளை பொறுப்பேற்கவுள்ளதாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தார்.