சுவரோவியங்கள்

நாட்டை அழகுபடுத்தும் சுவரோவியங்கள் வரையும் திட்டம் முல்லைத்தீவு முள்ளியவளை பிரதேசத்திலும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

அந்தவகையில் முள்ளியவளை பகுதியில் முல்லைத்தீவு – மாங்குளம் பிரதான சாலையின் வீதியோர கட்டடத்தில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு அசிங்கமாக காட்சியளித்து கொண்டிருந்தன.

இதனையடுத்து முள்ளியவளையில் உள்ள இளைஞர், யுவதிகள் தமக்கு கிடைக்கின்ற நேரங்களை பயன்படுத்தி பேருந்து தரிப்பிடங்கள், மதில்கள், வீதியோர கட்டடங்களின் சுவர்கள் ஆகியவற்றில் ஒவியங்களை வரைந்து ஒவியங்களால் அழகாக்கி வருகின்றனர்.

இதன் முதற்கட்டமாக முள்ளியவளை நகர்ப்பகுதியில் உள்ள சுவரொன்றில் இளைஞர், யுவதிகள் இணைந்து சுவரை சுத்தம் செய்து ஒவியங்களை வரைந்து அழகாக்கியுள்ளனர்.



