இன்று!

விகாரி வருடம், மார்கழி மாதம் 15ம் தேதி, ஜமாதுல் அவ்வல் 4ம் தேதி,
31.12.19 செவ்வாய்க்கிழமை, வளர்பிறை, பஞ்சமி திதி மாலை 4:15 வரை,
அதன் பின் சஷ்டி திதி, சதயம் நட்சத்திரம் இரவு 1:53 வரை,
அதன் பின் பூரட்டாதி நட்சத்திரம், மரண யோகம்.
நல்ல நேரம் : காலை 7:30 – 9:00 மணி
ராகு காலம் : பகல் 3:00 – 4:30 மணி
எமகண்டம் : காலை 9:00 – 10:30 மணி
குளிகை : பகல் 12:00 – 1:30 மணி
சூலம் : வடக்கு
தினமும் காலையில் காலண்டரை திகதிப் பார்க்க கிழிக்கிறோமோ இல்லையோ கண்டிப்பாக ராசிப்பலன் பார்க்க கிழிப்போம்.
இன்றைய தினத்தில் நமது ராசிக்கு என்ன பலன் என்பதை பார்ப்பதில் அதிகமானோருக்கு ஆர்வம் இருக்கிறது. அந்த வகையில் இன்று உங்கள் ராசிக்கு என்ன பலன் என்பதை பார்க்கலாம் வாருங்கள்.

மேஷம்
மேஷம்: ஆன்மிகப் பெரியோரின் ஆசி கிட்டும். நண்பர்கள், உறவினர்கள் ஒத்துழைப்பார்கள். மற்றவர்களால் நீங்கள் ஆதாயம் பெறுவீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்க ளின் ரசனையைப் புரிந்துக் கொள்வீர்கள். உத்யோகத்தில் உங்களின் திறமைகள் வெளிப் படும். மற்றவர்களால் புகழப்படும் நாள்.

ரிஷபம்
ரிஷபம்: கொடுத்த வாக்கை காப்பாற்ற துடிப்புடன் செயல்படுவீர்கள். சொந்த பந்தங்கள் சிலர் கேட்ட உதவியை செய்வீர்கள். உங்களால் வளர்ச்சியடைந்த சிலரை இப்பொழுது சந்திக்க நேரிடும். வியாபாரத்தில் சில சூட்சுமங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும். முயற்சிகள் பலிதமாகும் நாள்.

மிதுனம்
மிதுனம்: இதுவரை கணவன்-மனைவிக்குள் இருந்த பிணக்கு கள் நீங்கும். நீண்ட நாள் பிரச்சினை களுக்கு சரியான தீர்வு காண்பீர்கள். உறவினர்கள் மதிப்பார்கள். வியாபாரத்தில் வேலையாட்களின் ஆதரவு கிடைக் கும். உத்யோகத்தில் திருப்திகரமான சூழ்நிலை உருவாகும். தடைபட்ட காரியங்கள் முடியும் நாள்.

கடகம்
கடகம்: சந்திராஷ்டமம் தொடர் வதால் தெளிவான முடிவுகள் எடுக்க முடியாமல் குழம்புவீர்கள். குடும்பத்தில் உள்ளவர்களின் நிறைகுறைகளை சுட்டிக் காட்டுவதால் பிரச்சினை வர வாய்ப்புள்ளதால் கவனம் தேவை. வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாவதில் தாமதம் ஏற்படும். உத்யோகத்தில் சக ஊழியர்களுடன் வாக்குவாதம் வேண்டாம். எதிர்பார்ப்புகள் தாமதமாகி முடியும் நாள்.

சிம்மம்
சிம்மம்: உங்களுடைய அறிவாற்றலை வெளிப்படுத்த நல்லவாய்ப்புகள் வரும். உடன் பிறந்தவர்கள் உங்கள் வளர்ச்சிக்கு பக்க பலமாக இருப்பார்கள். கல்யா ணப் பேச்சு வார்த்தை சாதகமாக முடியும். வாகனத்தை சரி செய்வீர்கள். வியாபாரத்தில் புது ஒப்பந்தங்களால் லாபம் பெருகும்.உத்தியோகத்தில் புது பொறுப்புகள் தேடி வரும்.திறமைகள் வெளிப்படும் நாள்.

கன்னி
கன்னி: நீண்ட நாளாக வர வேண்டிய பணம் கைக்கு வந்து சேரும். உறவினர்கள் நண்பர்கள் மத்தி யில் உங்களின் முக்கியத்துவம் அதிகரிக்கும். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். உத்யோகத் தில் சவாலான காரியங்களையும் சாதாரணமாக முடிப்பீர்கள். தொட்டது துலங்கும் நாள்.

துலாம்
துலாம்: குடும்பத்தாரின் ஆதரவுபெருகும் ஆடம்பர செலவுகளை குறைத்து சேமிக்கத் தொடங்குவீர் கள். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். நண்பர்க ளால் ஆதாயமுண்டு. வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். உத்யோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவால் நினைத்ததை முடிப்பீர்கள் . புதுமை படைக்கும் நாள்.

விருச்சிகம்
விருச்சிகம்: பழைய பிரச்னைக ளுக்கு சுமூக தீர்வு காண்பீர்கள். தாயாருடன் மனஸ்தாபம் வந்து நீங்கும். பணப் பற்றாக்குறை இருந்தாலும் கேட்ட இடத்தில் உதவி கள் கிடைக்கும். புது வேலை அமையும். வியா பாரத்தில் பங்குதாரர்களின் பிரச்சினை தீரும். உத்யோகத்தில் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். தேவைகள் பூர்த்தியாகும்.

தனுசு
தனுசு: திட்டவட்டமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். விருந்தினர்களின் வருகையால் வீடு களை கட்டும். பிரபலங்களின் நட்பு கிடைக்கும். வியாபாரத்தில் புதிய சரக்குகள் கொள்முதல் செய்வீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகள் உங்களுக்கு முன்னுரிமை தருவார்கள். வெற்றி கிட்டும் நாள்.

மகரம்
மகரம்: கடந்த இரண்டு நாட்களாக குடும்பத்தில் இருந்து வந்த கூச்சல் குழப்பங்கள் விலகும். அழகும் இளமையும் கூடும் தள்ளிப்போன விஷயங்கள் உடனே முடியும். புதியவரின் நட்பால் உற்சாகமடைவீர்கள். வியாபாரத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும். புதிய பாதை தெரியும் நாள்.

கும்பம்
கும்பம்: ராசிக்குள் சந்திரன்நீடிப்பதால் எடுத்த காரியங்களைமுடிக்க போராட வேண்டியிருக் கும். வீட்டிலும் வெளியிலும் மற்றவர்களை அனுசரித்துப் போங்கள்.கோபத்தால் பகை உண்டாகும். லேசாக தலைவலிக்கும். உத்தியோகத்தில் அதிகாரிகள் தவறு களை சுட்டிக் காட்டினால் ஏற்றுக்கொள்ளுங்கள். எதிர்மறை நேர்மறை எண்ணங்கள் தேவைப் படும் நாள்.

மீனம்
மீனம்: எடுத்த காரியங்களை முடிப்பதற்குள். அலைச்சல் அதிகரிக் கும். மறைமுக எதிர்ப்புகள் உண்டாகும். முக்கிய கோப்புகளை கையாளும் போது அலட்சியம் வேண்டாம். வியாபாரத்தில் வேலையாட்களுடன் விவாதங்கள் வந்து போகும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளுடன் மோதல் போக்கை கடை பிடிக்காதீர்கள். போராடி வெல்லும் நாள்.
