முல்லைத்தீவில் அதிகரிக்கும் சோதனைச் சாவடிகள்! மக்கள் அசௌகரியம்!

முல்லைத்தீவு

வட்டுவாகல் கடற்படையினர் சோதனைச் சாவடிகள் அமைத்து பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வரும் நிலையில் இன்று அதே பகுதியில் இராணுவத்தினரும் சோதனைச் சாவடிகள் அமைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பரந்தன் பிரதான வீதியில் பயணிக்கும் பயணிகள் தற்பொழுது வட்டுவாகல் சப்தகன்னியர் ஆலயத்திற்கு அருகில் நிலை கொண்டுள்ள இராணுவத்தினரின் சோதனைச் சாவடிகளில் பொது மக்கள் சோதனைக்கு உள்ளாக்கப்படுகின்றனர்.

இதேவேளை 100 மீற்றர் இடைவெளியில் நிலைகொண்டுள்ள வட்டுவாகல் கடற்படையினர் 700 மீற்றர் தூரத்தில் சோதனைச் சாவடிகளை அமைத்து வாகனங்களை நிறுத்தி சோதனைகளில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறுகிய தூரத்தில் இரண்டு சோதனைச் சாவடிகள் அமைந்திருப்பதால் பொதுமக்கள் அசௌகரியங்களை எதிர்நோக்குவதாக தெரியவருகின்றது.

மேலும் குறித்த தூர இடைவெளிகளில் ஏற்கனவே கடற்படையினர் காவலரண்களை அமைத்து கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.