வெளிநாட்டில் துடிதுடித்து உயிரிழந்த 25 வயது இளம்பெண்! உடல் உறுப்புகள் தானம் குறித்து முன்னரே எழுதிய வரிகள்!

இந்தியப்பெண்

அமெரிக்காவில் இந்தியப்பெண் கார் விபத்தில் உயிரிழந்த நிலையில் அவர் விருப்பப்படியே உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டுள்ளன.

ஹைதராபாத்தை சேர்ந்தவர் சரிதா ரெட்டி (25). இவர் அமெரிக்காவில் மென்பொருள் பொறியாளராக பணிபுரிந்து வருகிறார்.

இந்நிலையில் கடந்த ஞாயிறு இரவு மிச்சிகனில் சரிதா தனது நண்பர்களுடன் காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரில் வேகமாக வந்த கார் சரிதா கார் மீது பயங்கரமாக மோதி விபத்து ஏற்பட்டதில் நால்வரும் படுகாயமடைந்தனர்.

இன்னொரு காரில் வந்த நபர் குடிபோதையில் காரை ஓட்டி வந்தது தெரியவந்தது. இதையடுத்து வலியால் துடித்த அவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் சரிதா ஏற்கனவே மூளைச்சாவு அடைந்துவிட்டது தெரிந்தது.

மற்ற மூவருக்கும் தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.

இதனிடையில் தனக்கு எதாவது நேர்ந்தால் தன்னுடைய உடல் உறுப்புகளை தானம் செய்யுங்கள் என சரிதா ஏற்கனவே எழுதி வைத்தது தெரியவந்ததையடுத்து அவரின் இதயம் உள்ளிட்ட உடல் உறுப்புகளை சரிதா குடும்பத்தார் சம்மதத்துடன் மருத்துவர்கள் எடுத்தனர்.

இதனிடையில் சரிதாவின் சடலம் விரைவில் சொந்த ஊருக்கு கொண்டுவரப்படவுள்ளது. இதற்காக ஓன்லைன் மூலமாக நிதி வசூல் செய்யப்பட்டு வருகிறது.