இன்றைய 01.01.2020 இன்று உங்கள் ராசிக்கு என்ன பலன்!

இன்று!

விகாரி வருடம், மார்கழி மாதம் 16ம் தேதி, ஜமாதுல் அவ்வல் 5ம் தேதி,
1.1.2020 புதன்கிழமை, வளர்பிறை, சஷ்டி திதி மாலை 6:18 வரை,
அதன்பின் சப்தமி திதி, பூரட்டாதி நட்சத்திரம் நாளை அதிகாலை 4:25 வரை
அதன்பின், உத்திரட்டாதி நட்சத்திரம், அமிர்த-சித்தயோகம்.

நல்ல நேரம்: காலை 9:00-10:30 மணி
ராகு காலம்: பகல் 12:00-1:30 மணி
எமகண்டம்: காலை 7:31-9:00 மணி
குளிகை: காலை 10:30-12:00 மணி
சூலம்: வடக்கு

தினமும் காலையில் காலண்டரை திகதிப் பார்க்க கிழிக்கிறோமோ இல்லையோ கண்டிப்பாக ராசிப்பலன் பார்க்க கிழிப்போம்.

இன்றைய தினத்தில் நமது ராசிக்கு என்ன பலன் என்பதை பார்ப்பதில் அதிகமானோருக்கு ஆர்வம் இருக்கிறது. அந்த வகையில் இன்று உங்கள் ராசிக்கு என்ன பலன் என்பதை பார்க்கலாம் வாருங்கள்.

மேஷம்

மேஷம்: எடுத்த காரியத்தில் வெற்றி பெறுவீர்கள். பெற்றோர்கள் நண்பர்களின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். வெளிவட்டாரத்தில் உங்கள் அந்தஸ்து உயரும். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் உதவி கிடைக்கும். வியாபாரத்தில் சூட்சுமங்களை உணர்வீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் பாராட்டுவார்கள். சிறப்பான நாள்.

ரிஷபம்

ரிஷபம்: எதையும் சமாளிக்கும் சாமர்த்தியம் பிறக்கும். பிள்ளைகளின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். மனைவி வழியில் ஒத்துழைப்பு அதிகரிக்கும். மனதிற்கு இதமான செய்தி வரும். உத்யோகத்தில் அதிகாரிகள் மத்தியில் உங்களைப் பற்றிய நல்ல இமேஜ் உண்டாகும். உதவிகள் கிட்டும் நாள்.

மிதுனம்

மிதுனம்: குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும். நேர்மறை எண்ணங்கள் பிறக்கும். தெளிவான முடிவுகளை எடுப்பீர்கள். புதிய பொருள்கள் வந்து சேரும். வியாபாரத்தில் தள்ளிப்போன வாய்ப்புகள் தேடி வரும். உத்தியோகத்தில் மேலதிகாரி உங்களுக்கு சில சூட்சுமங்களை சொல்லித் தருவார். திடீர் திருப்பங்கள் நிறைந்த நாள்.

கடகம்

கடகம்: சந்திராஷ்டமம் தொடர்வதால் புதிய முயற்சிகள் தள்ளிப் போய் முடியும். உங்களை நீங்களே குறைத்து மதிப்பிடாதீர்கள். கோபத்தால் இழப்புகள் ஏற்படும். வியாபாரத்தில் ஒப்பந்தங்கள் தள்ளிப்போகும் .உத்தியோகத்தில் அதிகாரிகளுடன் பனிப்போர் வந்து நீங்கும். அலைச்சல் அதிகரிக்கும் நாள்.

சிம்மம்

சிம்மம்: சவாலான வேலைகளையும் சாதாரணமாக முடிப்பீர்கள். பிள்ளைகள் உங்கள் பேச்சிற்கு மதிப்பளிப்பார்கள்.கல்யாணப்பேச்சு வார்த்தை சுமுகமாக முடியும். வியாபாரத்தில் புதிய சலுகைகளை அறிவிப்பீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். திறமைகள் வெளிப்படும் நாள்.

கன்னி

கன்னி: குடும்பத்தினர் உங்கள் ஆலோசனையை ஏற்பார்கள். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கு சாதகமாக திரும்பும் அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்கும். உத்தியோகத்தில் உங்களின் திறமையைக் கண்டு மேலதிகாரி வியப்பார். தொட்டது துலங்கும் நாள்.

துலாம்

துலாம்: புதிய திட்டங்களை தீட்டுவீர்கள். பிள்ளைகளால் மகிழ்ச்சி உண்டாகும். நீண்ட நாள் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். நண்பர்கள் உறுதுணையாக இருப்பார்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும். கடையை விரிவுபடுத்துவீர்கள். உத்தியோகத்தில் புது பொறுப்புகள் தேடி வரும். உற்சாகமான நாள்.

விருச்சிகம்

விருச்சிகம்: எதிர்பார்த்தவைகளில் சில தள்ளிப் போனாலும் எதிர்பாராத ஒரு வேலை முடியும். தாயாருடன் மோதல்கள் வந்து நீங்கும். வர வேண்டிய பணத்தை போராடி வசூலிப்பீர்கள். கலைப் பொருட்கள் வாங்குவீர்கள். உத்தியோகத்தில் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். உழைப்பால் உயரும் நாள்.

தனுசு

தனுசு: தைரியமாகவும் தன்னிச்சையாகவும் சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். அரசால் கூடுதல் பலன்கள் கிடைக்கும். வாகனப் பழுதை சரி செய்வீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகளுக்கு நெருக்கமாவீர்கள். வெற்றிக்கு வித்திடும் நாள்.

மகரம்

மகரம்: கணவன் மனைவிக்குள் அன்பும் ஆதரவும் அதிகரிக்கும். நேர் இழுபறியாக இருந்த வேலைகள் முடியும். பணவரவு திருப்தி தரும். உறவினர்களின் ஆதரவும் கிடைக்கும். உத்தியோகத்தில் தலைமையின் நம்பிக்கையை பெறுவீர்கள் . மகிழ்ச்சி தொடங்கும் நாள்.

கும்பம்

கும்பம்: ராசிக்குள் சந்திரன் இருப்பதால் மனதில் இனம் புரியாத பயம் கவலை வந்து போகும். கணவன்-மனைவிக்குள் வீண் சந்தேகம் வந்து செல்லும். உடல்நிலையில் பாதிப்பு ஏற்படும். வியாபாரத்தில் வேலையாட்களால் விரயம் வரும். உத்யோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் தாமதமாக கிடைக்கும். வளைந்துக் கொடுக்க வேண்டிய நாள்.

மீனம்

மீனம்: வேலைகளை உடனே முடிக்க வேண்டும் என நினைப்பீர்கள். நண்பர்கள் உறவினர்கள் பணம் கேட்டு நச்சரிப்பார்கள். வியாபாரத்தில் புது பங்குதாரரை சேர்ப்பீர்கள். வியாபாரத்தில் போட்டிகளையும் தாண்டி ஓரளவு லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் மறைமுக பிரச்சினைகள் வந்து செல்லும். அதிகம் அலைச்சல் ஏற்படும் நாள்.