அமெரிக்காவில்

கிறிஸ்துமஸ் பரிசாக மகளுக்கு தாயார் வாங்கி அளித்த பொம்மையில் போ தை ம ருந்து கண்டெடுக்கப்பட்ட சம்பவம் வெளியாகியுள்ளது.
நியூ ஜெர்சி மாகாணத்தைச் சேர்ந்த எலிசபெத் ஃபெய்ட்லி தாயார் தமது மகளுக்கு கிறிஸ்துமஸ் பரிசு அளிக்க விரும்பி, கைகளால் உருவாக்கப்பட்ட பொம்மை ஒன்றை 500 டொலருக்கு வாங்கியுள்ளார்.
மகளுக்கு அந்த பொம்மையை ஃபெய்ட்லி பரிசாக அளித்தும் அவருக்கு, அதன் தோற்றத்தில் ஒருவகை ம ர்மம் இருப்பதாகவே பட்டுள்ளது. மட்டுமின்றி குறித்த பொம்மை க டத்தல் பொருளாக இருக்க வாய்ப்பு உள்ளதா எனவும் அவர் யோசித்துள்ளார்.
மேலும், அந்த பொம்மையை கொஞ்சம் அழகு படுத்தவும் முயன்றுள்ளார். இது அனைத்தும் ஃபெய்ட்லியின் மகளை திருப்திப்படுத்தவில்லை.

இதனையடுத்து, பொம்மைகளை பழுது நீக்கும் கடை ஒன்றில் எடுத்துச் சென்று, அழகு படுத்த கோரியுள்ளார். அவர்களே அந்த பொம்மைக்குள் போ தை ம ருந்து மறைத்து வைக்கப்பட்டுள்ளதை கண்டறிந்தனர்.
இந்த தகவல் உடனடியாக செகாக்கஸ் காவல் துறைக்கு தெரியப்படுத்தவும், அவர்கள் ஃபெய்ட்லியை விசாரணைக்கு அழைத்துள்ளனர்.
முதலில் குற்றவாளி ஃபெய்ட்லியே என்ற முறையில் விசாரணை மேற்கொண்ட பொலிசார், இவர் அளித்த விளக்கம் கேட்டு விடுதலை செய்துள்ளனர். ஃபெய்ட்லி பொம்மை வாங்கிய பகுதியானது போ தை ம ருந்து விற்பனைக்கு பெயர் போன இடங்களில் ஒன்று என கூறப்படுகிறது.
