அதிர்ஷ்டம்

தாய்லாந்தில் புலம்பெயர்ந்த இளைஞருக்கு லொட்டரியில் பெரியளவில் பரிசு விழுந்துள்ளது அவரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
கம்போடியாவை சேர்ந்தவர் Thida Sana (29). இவர் ஆறு ஆண்டுகளுக்கு முன்னர் தாய்லாந்துக்கு புலம்பெயர்ந்தார்.
அங்குள்ள ஒரு பிரபலமான உணவகத்தில் உதவியாளராக வேலை செய்து வரும் Thida-வுக்கு லொட்டரி சீட்டுகள் வாங்கும் பழக்கம் உள்ளது.
இந்நிலையில் சமீபத்தில் அவர் வாங்கிய லொட்டரி சீட்டுக்கு $200,000 பரிசு விழுந்துள்ளது.

இது Thida-வை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இது குறித்து அவர் கூறுகையில், இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை லொட்டரி விளையாட்டில் நான் ஈடுபடுவேன்.
எனக்கு தற்போது பெரியளவில் லொட்டரியில் பரிசு விழுந்துள்ளது, இதை வைத்து கம்போடியாவில் என் தாய்க்கு புதிய வீடு கட்டி தருவேன்.
எனக்கு லொட்டரியில் பரிசு விழுந்தவுடன் நான் பணிபுரியும் உணவகத்தின் உரிமையாளர் தான் பரிசை நான் பெறுவதற்கு உதவி செய்தார் என கூறியுள்ளார்.
