மகளுக்கு பேய் பிடித்திருப்பதாக கூறிய ஜோசியம் பார்க்கும் பெண்: நம்பிய பெண்ணுக்கு நேர்ந்த சோகம்!

அமெரிக்கா

தனது மகளுக்கு பேய் பிடித்திருப்பதாக கூறிய பெண்ணை நம்பியதால் 70,000 டொலர்களை பறிகொடுத்துள்ளார் ஒரு பெண்.

அமெரிக்காவின் Massachusettsஐச் சேர்ந்த Tracy Milanovich (37) என்ற பெண், ஜோசியம் மற்றும் ஆவிகளுடன் பேசும் நிலையம் ஒன்றை நடத்தி வந்துள்ளார்.

அவர் மீது, ஏமாற்றி பணம் பறித்ததாக பல புகார்கள் வந்துள்ள நிலையில், ஒரு பெண்ணின் மகளுக்கு பேய் பிடித்துள்ளதாக கூறி மோசடி செய்ததாக ஒரு குற்றச்சாட்டு பொலிசாரிடம் தெரிவிக்கப்பட்டது.

ஒரு பெண்ணிடம் அவரது மகளுக்கு பேய் பிடித்துள்ளதாக் கூறிய Tracy, அதை விரட்டுவதற்கு பல பொருட்களும் ஏராளம் பணமும் தேவைப்படும் என்று கூறியுள்ளார். அவரை நம்பி அந்த பெண் 71,000 டொலர்கள் வரை கொடுத்துள்ளார்.

அத்துடன், ஏராளம் வீட்டு உபயோக பொருட்கள், படுக்கை விரிப்புகள் தலையணைகள் ஆகியவற்றையும் கொடுத்துள்ளார் அவர்.

பின்னர் Tracy மீது ஏராளமானோர் புகார் தெரிவித்திருந்த விடயம் தெரியவர, அந்த பெண்ணும் பொலிசாரிடம் தான் ஏமாற்றப்பட்டதாக புகார் கொடுத்துள்ளார்.

பொலிசார் Tracy மீது திருட்டு குற்றச்சாட்டு பதிவு செய்து அவரை கைது செய்துள்ளனர்.