யாழ்.

யாழ்ப்பாணம் தொண்டைமானாறு கடல்நீரேரியில் குளித்துக்கொண்டிருந்தபோது நீரில் அ டித்துச் செ ல்லப்பட்ட இளைஞர் ச டலமாக மீ ட்கப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணம் பருத்தித்துறையைச் சேர்ந்த கந்தசாமி கஸ்தூரன் (வயது 26) என்ற இளைஞர் நண்பர்களுடன் தொண்டைமானாறு கடல் நீரேலியில் குளித்துக்கொண்டிருந்தபோது நீ ரில் அ டித்துச் செ ல்லப்பட்டிருந்தார்.

அவரை மீட்பதற்கு அவருடைய நண்பர்கள் முயன்றபோதிலும் அது கைகூடாமல் போயுள்ளது. இதனை அடுத்து கடற்படையினரின் துணையுடன் அவரைத் தேடும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது.
பொதுமக்கள் இணைந்து சுமார் ஒரு மணிநேரமாக தேடுதல் நடவடிக்கையினை மேற்கொண்டிருந்ததுடன், குறித்த இளைஞனை உ யிரிழந்த நிலையில் ச டலமாக மீ ட்டுள்ளனர்.
இச் சம்பவம் தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
