ஹப்புத்தளை கோரச் சம்பவம் – விமானபடை வீரரை திருமணம் செய்ய காத்திருந்த பெண்ணின் நிலை!

இலங்கை

ஹப்புத்தளையில் நேற்று காலை இடம்பெற்ற சிறிய ரக விமான விபத்தில், இரண்டு மாதங்களில் திருமண பந்தத்தில் இணையவிருந்த வீரரும் உயிரிழந்துள்ளதாக தெரிய வருகிறது.

கம்பளை பிரதேசத்தை சேர்ந்த லெப்ட்டினன்ட் கே.எம்.டீ.எல்.குலதுங்க என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இது தொடர்பில் கருத்து வெளியிட்ட உயிரிழந்தவரின் சகோதரர்

“கடந்த மூன்று வருடங்களுக்கு முன்னரே தம்பி விமானப் படையில் இணைந்துக் கொண்டார்.

கடந்த இரண்டு வாரத்திற்கு முன்னர் வீட்டிற்கு வந்தவர் சம்பவ தினமான நேற்று வீட்டிற்கு விடுமுறைக்காக வருவதாக கூறியிருந்தார்.

சம்பவம் இடம்பெறுவதற்கு அரை மணித்தியாலத்திற்கு முன்னர் வீட்டில் உள்ளவர்களிடம் தொலைபேசியில் உரையாடினார்.

மார்ச் மாதம் திருமணம் செய்யவிருந்தார். அதற்கான அனைத்து ஏற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டு வந்ததாக அவர் கண்ணீருடன் தெரிவித்துள்ளார்.

திருமணம் செய்ய காத்திருந்த மணப்பெண் இந்த அனர்த்தம் காரணமாக அதிச்சியடைந்துள்ளதாக உறவினர்கள் தெரிவித்துள்னளர்.

நேற்று இடம்பெற்ற கோர விபத்தில் நான்கு விமானபடை வீரர்கள் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.