2020 சனிப்பெயர்ச்சி எப்போது ஆரம்பம்? யாருக்கு என்ன சனி தொடங்குகிறது?

சனிப் பெயர்ச்சி

2020 சனிப் பெயர்ச்சி திருக்கணித பஞ்சாங்கத்தின் படி வரும் விகாரி வருடம் தை 10ம் தேதி அதாவது ஜனவரி 24ஆம் தேதி நடக்க உள்ளது.

வாக்கிய பஞ்சாங்கத்தின்படி 2020 டிசம்பர் 26ஆம் தேதி சனிப்பெயர்ச்சி நடக்க உள்ளது. சனிப் பெயர்ச்சியில் சனி பகவான் தனுசு ராசியிலிருந்து மகரம் ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார்.

சனி பகவான் மகர ராசிக்கு செல்வதால் தனுசு, மகரம், கும்பம் ஆகிய ராசியினருக்கு ஏழரை சனி தொடங்குகின்றது.

சனி பகவானின் பார்வை 3, 7, 10ஆம் இடங்களில் விழுகிறது. சனி பகவான் 3ஆம் பார்வையாக மீன ராசியையும், 7ஆம் பார்வையாக கடக ராசியையும், 10ஆம் பார்வையாக துலாம் ராசியையும் பார்வையால் பார்க்க உள்ளார்.

இதன் மூலம் தனுசு, மகரம், கும்பம் ஆகிய ராசிக்கு மிகச்சிறந்த படிப்பினை கொடுக்க உள்ளார். இதன் காரணமாக இந்த ராசிகள் எந்த வித பாதிப்புகளைப் பெற உள்ளனர் என்பதைப் பார்ப்போம்.

விருச்சிகம் – சங்கடங்கள் தீரும் காலம்
கடந்த ஏழரை வருடங்கள் சனியின் பார்வையால் அல்லல்பட்டு வந்த விருச்சிக ராசியினர், 2020 சனிப் பெயர்ச்சி மூலம் துயரங்களிலிருந்து விடுபட உள்ளீர்கள்.

விருச்சிக ராசிக்கு சங்கடங்கள் தீரும் காலம் தொடங்க உள்ளதால், தொழில், வியாபாரம் வளர்ச்சி காணும். பல ஆண்டு காலமாக உங்களிடம் பணம் வாங்கி ஏமாற்றி வந்தவர்கள் பணத்தை திருப்பி தருவார்கள்.

பல்வேறு நன்மைகள் ஏற்படுவதன் மூலம் மன நிம்மதி ஏற்படும்.

இந்த சனிப் பெயர்ச்சி மூலம் விருச்சிக ராசிக்கு ஏழரை சனி முடிவதால், வாழ்விலும், தொழிலும் முன்னேற்றம் ஏற்படும்.

விருச்சிக ராசியினர் இதுவரை அடைந்துவந்த இன்னல்கள் தீருவதோடு, பண வரவு அதிகரிக்கும். புதிய வேலை வாய்ப்பு தருவார்.

இதுவரை திருமண முயற்சியில் இருந்த தடைகள் நீங்கும். பிரிந்து போன உறவுகள் ஒன்று சேரும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் குதுகலமும் ஏற்படும்.

ஏழரை சனியின் கடைசியான பாத சனி விலகுவதால் ஆரோக்கியம் மேம்படும். கால்வலி பிரச்சினைகள் தீரும்.

இதுவரை ஏற்பட்டு வந்த நஷ்டங்கள் தீர்ந்து லாபமான நிலை ஏற்படும். இதற்காக சனி பகவானுக்கு நன்றி சொல்லி வணங்கும் பொருட்டு திருநள்ளாறு சென்று வருவது நல்லது.

தனுசு – பத சனி
தனுசு ராசிக்கு இந்த சனி பெயர்ச்சி மூலம் ஜென்ம சனி விலகி பத சனியாகிறது. இதனால் தனாதிபதி ஸ்தானததில் அமரப் போகின்றார். தடைகள், சோதனைகள் அனுபவைத்த தனுசு ராசியினர் பெருமூச்சு விடும் காலம்.

பொருளாதார சிக்கல் தீர்ந்து பண வரவு ஏற்படுத்தும் நிகழ்வுகள் நடக்கும். பாத சனியாக வருவதால் பயணங்களில் கவனம் தேவை, கால்களில் அடிபட வாய்ப்புள்ளதால், பாதுகாப்பான பயணங்கள் அவசியம்.

தனுசு ராசிக்கு இரண்டாம் இடத்தில் சனி அமர உள்ளார். இதனால் இருளிலிருந்த உங்களின் வாழ்க்கைக்கு கலங்கரை விளக்கம்போல் வெளிச்சம் தென்படும். வெளிநாடு வேலை முயற்சிப்பவர்களுக்கு வேலை கிடைக்கும். விசா கிடைக்கும்.

இருப்பினும் உங்களின் உடல் நாலனில் மிகுந்த அக்கறை தேவைப்படும். வண்டி, வாகங்களைப் பயன்படுத்துவோர் மிக கவனமாக இருப்பது அவசியம்.

உங்கள் ராசிக்கு 8ஆம் இடத்தில் சனியின் பார்வை விழுவதால் உங்களுக்கு பொருளாதார வளர்ச்சி இருக்கும். இருப்பினும் பொறுமை மிக முக்கியம். கஷ்டங்கள் நீங்கி நன்மை வந்து சேரும்.

மகரம் – ஜென்ம சனி
மகர ராசிக்கு அடுத்த இரண்டரை ஆண்டு ஜென்ம சனி காலமாகும். சனி பகவான் தன்னுடைய ராசிக்கு ஆட்சி பெற்று அமரப்போவதால் 30 வயதைக் கடந்தவர்கள் முன்னேற்ற காலத்தை காண போகிறார்கள்.

சனியின் பார்வை மீனம், கடகம், துலாம் ஆகியவற்றின் மிது விழுகிறது. தொழில் தொடங்கும் எண்ணம் நிறைவேறும்.

முன்னேற்றம் கிடைக்கும். சகோதர / சகோதரிகளுக்கு நன்மை செய்வீர்கள். மாணவர்கள் தேர்வுகளில் சிறப்பான மதிப்பெண் பெறுவீர்கள். அரசு தொடர்பாக ஆதாயம் கிடைக்கும்.

கும்பம் – ஏழரை சனி ஆரம்பம்
சனி பகவான் கும்ப ராசிக்கு 12ஆம் இடத்திற்கு வருவதால், ஏழரை சனி ஆரம்பம் ஆகின்றது. இது உங்களுக்கு விரய சனி. இருப்பினும் இதனால் உங்களுக்கு அதிக பாதிப்பை தர மாட்டார்.

விபரீத ராஜயோக நிலை இருக்கும். இதுவரை லாப சனியாக இருந்த நிலையில் தற்போது விரய சனியாக அமர்வதால், உங்களின் பண விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டியது அவசியம்.

எவ்வளவு பணத்தை சம்பாதித்தாலும் செலவு ஏற்படக் கூடிய காலம்.

அது சேமிக்கு வகையில் அதாவது முதலீடுகளாக இல்லாமல் தேவையற்ற செலவாக இருக்கும். 30 வயதுக்கு உட்பட்டவர்கள் மிகவும் கவனமாக இருப்பது அவசியம்.

30 வயதுக்கு மேற்பட்டோருக்கு இது பொங்கு சனியை அனுபவிப்பீர்கள். சொத்துக்கள் சேரும்.