ஜார்ஜியா

நாட்டை சேர்ந்த 7 வயது சிறுவன் ஐபோனின் ஏர்பாட்டை விழுங்கியதால் மருத்துவர்கள் சிகிச்சையளித்து வெளியே எடுத்துள்ளனர்.
ஜார்ஜியாவை சேர்ந்த கியரா ஸ்ராடு என்ற தாய், தன்னுடைய 7 வயது மகனுக்கு ஆப்பிள் போனும், அதனுடன் சேர்ந்த ஏர்பாட்களையும் கிறிஸ்துமஸ் பரிசாக வழங்கியுள்ளார்.
இதை சிறுவன் பயன்படுத்தி வந்த நிலையில், கிறிஸ்துமஸ் முடிந்த மூன்று நாட்களில் அந்த ஏர்பாட்களில் ஒரு ஏர்பாடை சிறுவன் எதிர்பாரதவிதமாக விழங்கிவிட்டான்.
இதனால் அதிர்ச்சியடைந்த தாய், உடனடியாக மகனை மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார். சிறுவனை எக்ஸ்ரே எடுத்து பார்த்த போது, வயிற்றில் ஏர்பாட் இருப்பதை மருத்துவர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

இதையடுத்து ஆரம்பகட்ட சிகிச்சை அளித்த மருத்துவர்கள் இயற்கை உபாதை வழியாக வெளியேற்றலாம் என்று கூறி அதற்கான சிகிச்சை அளித்து வெளியேற்றியுள்ளனர்.
இது குறித்து கியரா தன்னுடைய பேஸ்புக் பக்கத்தில், நண்பர்களின் வேண்டுதல்களுக்கு நன்றி எனவும் வயதாகும் வரை குழந்தைகளுக்கு செல்போன் போன்ற விலை உயர்ந்த அன்பளிப்பு தேவையில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.
