8 பேரின் உயிரை காவுகொண்ட கோர விபத்து! 50ற்கும் மேற்பட்டோர் படுகாயம்!

இலங்கை

பதுளை, பசறை பகுதியில் சற்று முன்னர் பேருந்து ஒன்று பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

இவ் விபத்தில் ஏழு பேர் உயிரிழந்ததுடன் மேலும் பேருந்தில் பயணம் செய்தவர்களில் 40 பேர் படுகாயமடைந்துள்ளதாக தெரியவருகிறது.

பதுளை பசறை மடுல்சீமை பிரதான சாலையில் 6 வது மைல் போஸ்டில் பயணிகள் பேருந்து ஒரு செங்குத்துப்பாதையில் விழுந்ததிலேயே இவ்வாறான உயிர்ச்சேதங்கள் ஏற்பட்டதாக தெரியவந்துள்ளது.

100 அடி பள்ளத்தில் பேருந்து பாய்ந்ததால் உயிரிழப்புக்கள் மேலும் அதிகரிக்கலாம் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.