என்னால் கொரோனா வைரஸை தடுக்க முடியும்! என் DNA-வையே மாற்றி கொண்டேன்… அதிரவைத்த தமிழ்ப்பெண்!

கொரோனா

கொரோனா தாக்குதலை கட்டுப்படுத்த தன்னிடம் நோய் எதிர்ப்பு சக்தி மிக்க யோகாசனம் ஒன்று உள்ளது என்று தமிழ்ப்பெண் கூறியுள்ளார்.

முகுந்தி என்ற யோக ஆசிரியர் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார்.

அவர் கூறுகையில், 3 ஆண்டுகளாக யோகா மூலம் பல்வேறு நோய்களுக்கு சிகிச்சை அளித்து வருகிறேன்.

என்னுடைய சலப்பாசனம் என்ற யோகாவை 5 நாட்கள் செய்தால் போதும் கொரோனா வைரஸ் தாக்கவே செய்யாது என்றும், முற்றிய நிலையில் உள்ள புற்றுநோய், எய்ட்ஸ் பாதித்த நோயாளிகளை கூட யோகாவால் தான் குணப்படுத்தியதாக நம்ப முடியாத தகவலை தெரிவித்தார்..

அனைத்திற்கும் உச்சகட்டமாக யோகாவால் தன்னுடைய டி.என்.ஏவையே மாற்றிக் கொண்டதாக கூறி செய்தியாளர்களை தலைசுற்ற வைத்தார்.

எப்படி கொரோனா வைரஸை குணப்படுத்துவீர்கள் என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு அதனை செய்து காட்ட ஒரு சிட்டிங்கிற்கு 3 ஆயிரம் ரூபாய் செலவாகும் என்றார்.

அருகில் இருந்த கணவரை வைத்து கொரோனா வைரஸ் தாக்குதலை தடுக்கும் யோகாசனம் என்று ஒன்றை செய்தும் காட்டினார் முகுந்தி.