திருமணமான 3 நாட்களில் புதுப்பெண்ணை பார்த்து கதறி துடித்த பெற்றோர்!

தமிழகத்தில்

திருமணமான மூன்று நாட்களில் புதுப்பெண் தற்கொ லை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வேலூர் மாவட்டத்தின் சக்கரமல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் சீனிவாசன். இவர் மகள் திவ்யா (21).

இவருக்கு சென்னை திருநின்றவூரை சேர்ந்த ராகவேந்திரன் (25) என்பவருக்கும் கடந்த 7ஆம் திகதி திருமணம் நடந்தது.

நேற்று திவ்யா, கணவர் ராகவேந்திரனுடன் சக்கரமல்லூர் கிராமத்தில் உள்ள தாய் வீட்டுக்கு விருந்துக்கு வந்தார். வீட்டில் எல்லோரிடமும் சகஜமாக பேசினார்.

சிறிது நேரம் கழித்து வீட்டில் உள்ள அறையில் ஓய்வு எடுப்பதாக கூறி சென்ற திவ்யா நீண்ட நேரமாகியும் வெளியே வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அவரது குடும்பத்தினர் கதவை தட்டி அழைத்தனர். கதவு திறக்கப்படவில்லை.

அதனால் அவர்கள் கதவை உடைத்து உள்ளே சென்றனர். அங்கு திவ்யா தூ க்கில் பி ணமாக தொ ங்கியதை பார்த்த பெற்றோர் கதறி அழுதனர்.

இது பற்றி தகவல் அறிந்த பொலிசார் சம்பவ இடத்துக்கு சென்று திவ்யாவின் உடலை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் திருமணமான 3 நாட்களில் திவ்யா தூ க்கிட்டு தற்கொ லை செய்ததற்கான காரணம் என்ன என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.