இன்றைய ராசிபலன் 13.02.2020 இன்று உங்கள் ராசிக்கு என்ன பலன்!

இன்று!

விகாரி வருடம், மாசி மாதம் 1ம் தேதி, ஜமாதுல் ஆகிர் 18ம் தேதி,
13.2.2020 வியாழக்கிழமை, தேய்பிறை, பஞ்சமி திதி நள்ளிரவு 2:32 வரை, அதன் பின் சஷ்டிதிதி, ஹஸ்தம் நட்சத்திரம் பகல் 2:39 வரை,
அதன்பின் சித்திரை நட்சத்திரம், சித்தயோகம்.

நல்ல நேரம்: காலை 10:30-12:00 மணி
ராகு காலம்: பகல் 1:30-3:00 மணி
எமகண்டம்: காலை 6:00-7:30 மணி
குளிகை: காலை 9:00-10:30 மணி
சூலம் : தெற்கு

பரிகாரம் : தைலம்
சந்திராஷ்டமம் : சதயம், பூரட்டாதி
பொது தட்சிணாமூர்த்தி வழிபாடு.

தினமும் காலையில் காலண்டரை திகதிப் பார்க்க கிழிக்கிறோமோ இல்லையோ கண்டிப்பாக ராசிப்பலன் பார்க்க கிழிப்போம்.

இன்றைய தினத்தில் நமது ராசிக்கு என்ன பலன் என்பதை பார்ப்பதில் அதிகமானோருக்கு ஆர்வம் இருக்கிறது. அந்த வகையில் இன்று உங்கள் ராசிக்கு என்ன பலன் என்பதை பார்க்கலாம் வாருங்கள்

மேஷம்

மேஷம்: உறவினர்கள், நண்பர்கள் மத்தியில் உங்கள் மதிப்பு உயரும். எதிர்பாராத நன்மைகள் உண்டாகும். சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். வியாபாரத்தில் புதிய முயற்சிகள் வெற்றியடையும். உத்தியோகத்தில் உங்களை நம்பி மூத்த அதிகாரி சில பொறுப்புகளை ஒப்படைப்பார். அமோகமான நாள்.

ரிஷபம்

ரிஷபம்: எதிர்காலத்திற்கு தேவையான பணத்தை சேமிப்பதற்கான வழியை யோசிப்பீர்கள். குடும்பத்தில் உங்கள் மதிப்பு, மரியாதை அதிகரிக்கும். நண்பர்களால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். உத்தியோகத்தில் திருப்திகரமான சூழல் உருவாகும். நினைத்தது நிறைவேறும் நாள்.

மிதுனம்

மிதுனம்: எதிர்ப்புகளைத் தாண்டி முன்னேறுவீர்கள். தாயாரின் உடல்நலத்தில் கவனம் தேவை. புதிய வேலைக்கான முயற்சிகள் கைகூடும். வியாபாரத்தில் பங்குதாரர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். உத்தியோகத்தில் அமைதியான சூழல் உண்டாகும். அதிகம் உழைக்க வேண்டிய நாள்.

கடகம்

கடகம்: சகோதர சகோதரிகளால் நன்மை உண்டாகும். அரசால் ஆதாயம் உண்டு உதயமாகும். தைரியமாகவும் துணிச்சலாகவும் செயல்படுவீர்கள். புதிய வாகனம் வாங்குவதற்கான முயற்சிகள் கைகூடும். வியாபாரத்தில் புதிய முடிவுகளை எடுப்பீர்கள். உத்தியோகத்தில் சில நுணுக்கங்களை கற்றுக்கொள்வீர்கள். விடா முயற்சியால் வெற்றி பெறும் நாள்.

சிம்மம்

சிம்மம்: குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். புதிய நண்பர்களால் ஆதாயமுண்டு. தள்ளிப்போன விஷயங்கள் உடனே முடியும். வியாபாரத்தில் தனலாபம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் இழந்த உரிமையை பெறுவீர்கள். நல்லன நடக்கும் நாள்.

கன்னி

கன்னி: ராசிக்குள் சந்திரன் இருப்பதால் மற்றவர்களின் விமர்சனங்களுக்கும், கேலிப் பேச்சிற்கும் ஆளாக வேண்டியிருக்கும். நீங்கள் சாதாரணமாக பேசக் கூடிய விஷயங்கள் கூட பிரச்னையாக வாய்ப் பிருப்பதால் கவனம் தேவை. உத்தியோகத்தில் பிரச்னைகள் உருவாகும். பொறுமைத் தேவைப்படும் நாள்.

துலாம்

துலாம்: மனப்பதட்டத்தாலும், வீண் கவலையாலும் உங்களின் செயல்திறன் குறையும். பிள்ளைகளின் உணர்வுகளைப் புரிந்துக்கொள்ளுங்கள். யாரையும் பகைத்துக்கொள்ள வேண்டாம். வியாபாரத்தில் மந்தமான நிலை உருவாகும். உத்தியோகத்தில் சக ஊழியர்களை அனுசரித்துப்போங்கள். தடைகளை தாண்டி முன்னேறும் நாள்.

விருச்சிகம்

விருச்சிகம்: உங்கள் நீண்டநாள் முயற்சிகள் அனைத்தும் வெற்றியடையும். நண்பர்களின் உதவி கிடைக்கும். மனதிற்கு இதமான செய்திகள் வந்துசேரும். மற்றவர்களுக்கு தேவையான உதவிகளைச் செய்வீர்கள். உத்தியோகத்தில் மற்றவர்களாலும் பாராட்டப்படுவீர்கள். உங்கள் திறமை வெளிப்படும் நாள்.

தனுசு

தனுசு: எடுத்த காரியங்களில் கண்ணும் கருத்துமாக செயல்பட்டு முன்னேறுவீர்கள். மனைவி வழியில் பக்கபலமாக இருப்பார்கள். பிரியமானவர்களுக்காக சிலவற்றை விட்டுக்கொடுப்பீர்கள். வியாபாரத்தில் புதிய முயற்சிகள் லாபம் தரும். உத்தியோகத்தில் உங்களின் ஆலோசனை ஏற்கப்படும். கண்ணும் கருத்துமாக செயல்படும் நாள்.

மகரம்

மகரம்: உங்கள் சூழ்நிலையில் புதிய மாற்றங்கள் ஏற்படும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் உருவாகும். தடைபட்ட காரியங்கள் அனைத்தும் இனிதே முடியும். காணாமல்போன முக்கிய ஆவணங்கள் கிடைக்கும். உத்தியோகத்தில் புதிய மாற்றங்கள் ஏற்படும். புது அத்தியாயம் தொடங்கும் நாள்.

கும்பம்

கும்பம்: சந்திராஷ்டமம் தொடர்வதால் மனக் குழப்பங்களும், நெருக்கமும் அதிகரிக்கும். அதிக வேலைச்சுமையால் அவ்வப்போது கோபப்படுவீர்கள். மற்றவர்களின் பேச்சை நம்பி ஏமாறவேண்டாம். வியாபாரத்தில் லாபம் மந்தமாக இருக்கும். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் பிரச்னையை சந்திப்பீர்கள். சகிப்புத்தன்மை தேவைப்படும் நாள்.

மீனம்

மீனம்: கடினமான காரியங்களையும் எளிதாக முடிப்பீர்கள். சகோதரர்களால் ஆதாயம் உண்டு. விலை உயர்ந்த ஆபரணங்களை வாங்குவீர்கள். வியாபாரத்தில் புதிய ஒப்பந்தங்களால் லாபம் பெறுவீர்கள். உத்தியோகத்தில் உயரதிகாரிகள் உங்களுக்கு சில முக்கிய அறிவுரைகள். தருவார்கள் திறமைகள் வெளிப்படும் நாள்.