அபிவிருத்திக்குழு தலைவரின் வேண்டுகோளுக்கு இணங்க முல்லை வலயத்திற்குள்ளேயே அதிபர்கள் நியமனம்!

முல்லைத்தீவு மாவட்டத்தில்

முல்லை வலயத்தில் 03 ஆம் தர அதிபர்கள் நியமனம் தொடர்பில் முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்திக்குழு தலைவர் விடுத்த கோரிக்கைக்கு அமைவாக வலயத்குள்ளேயே உள்ள அதிபர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்திக்குழுக் தலைவர் ச.கனகரத்தினம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் வடமாகாண ஆளுனர் மற்றும் வடமாகாண கல்வி பண்பாட்டு அலுவல்கள் விளையாட்டுத்துறை இளைஞர் விவகார அமைச்சின் செயலாளர் இ.இளங்கோவன் உள்ளிட்டவர்களுக்கு முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்திக்குழுக் தலைவர் எழுத்துமூல கடிதம் ஒன்றினை அண்மையில் அனுப்பிவைத்துள்ளார்.

இதன்போது முல்லைத்தீவு கல்வி வலயத்தினை சேர்ந்த நான்கு அதிபர்களை துணுக்காய் கல்வி வலயத்திற்கு இடம்மாற்றம் செய்ய இருப்பதும் அவர்களை முல்லைத்தீவு கல்வி வலயத்தில் உள்ள பாடசாலைகளின் அதிபர் வெற்றிடங்களுக்கு நிரப்புமாறும், முல்லைத்தீவு கல்வி வலயத்தில் உள்ள வேணாவில் சிறீ முருகானந்தா வித்தியாலயம், திம்புலி ஆரம்பபாடசாலை, முள்ளிவாய்க்கால் கிழக்கு அ.த.க பாடசாலை, நெத்தலியாறு,வெட்டுவாகல் அ.த.க.பாடசாலை, முல்லைத்தீவு றோ.க.மகளீர் வித்தியாலயம், புதுக்குடியிருப்பு றோ.கா உள்ளிட்ட முல்லை வலயத்தில் உள்ள 1-AB,1C, பாடசாலைகளில் காணப்படும் பிரதி அதிபர் மற்றும் உப அதிபர் வெற்றிடங்களுக்கு வேறு மாவட்டங்களில் இருந்து அதிபர்களை நியமிக்கும் போது அனைத்து அதிபர்களுக்கும் பாடசாலைகள் தூரப்பிரதேசங்களாக மாறுவதனால் அதிபர்களின் முழுமையான வினைத்திறனினை பாடசாலைகள் பெறமுடியாமல் போகும்.

எனவே முல்லை வலயத்தினை சேர்ந்த அதிபர்களை முல்லை வலயத்திலே நியமனம் வழங்குவதன் மூலம் அவர்களின் முழுமையான பயனை பெற வழிவகுக்கும் இதனை கருத்திற் கொண்டு அதிபர்கள் நியமனத்தினை வழங்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டதற்கு அமைவாக முல்லை வலயத்தினை சேர்ந்த அதிபர்களை முல்லை வலயத்திலேய நியமிக்கப்பட்டுள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்திக்குழு தலைவர் ச.கனகரத்தினம் தெரிவித்துள்ளார்.