இன்றைய ராசிபலன் 14.02.2020 இன்று உங்கள் ராசிக்கு என்ன பலன்!

இன்று!

விகாரி வருடம், மாசி மாதம் 2ம் தேதி, ஜமாதுல் ஆகிர் 19ம் தேதி,
14.2.2020 வெள்ளிக்கிழமை, தேய்பிறை, சஷ்டி திதி, நள்ளிரவு 12:23 வரை,
அதன் பின் சப்தமி திதி, சித்திரை நட்சத்திரம் பகல் 1:06 வரை,
அதன்பின் சுவாதி நட்சத்திரம், சித்தயோகம்.

நல்ல நேரம்: காலை 9:00-10:30 மணி
ராகு காலம்: காலை 10:30-12:00 மணி
எமகண்டம்: பகல் 3:00-4:30 மணி
குளிகை: காலை 7:31-9:00 மணி
சூலம் : மேற்கு

பரிகாரம் : வெல்லம்
சந்திராஷ்டமம் : பூரட்டாதி, உத்திரட்டாதி
பொது மகாலட்சுமி வழிபாடு, முகூர்த்தநாள்

தினமும் காலையில் காலண்டரை திகதிப் பார்க்க கிழிக்கிறோமோ இல்லையோ கண்டிப்பாக ராசிப்பலன் பார்க்க கிழிப்போம்.

இன்றைய தினத்தில் நமது ராசிக்கு என்ன பலன் என்பதை பார்ப்பதில் அதிகமானோருக்கு ஆர்வம் இருக்கிறது. அந்த வகையில் இன்று உங்கள் ராசிக்கு என்ன பலன் என்பதை பார்க்கலாம் வாருங்கள்

மேஷம்

மேஷம்: உங்களுடைய திறமையை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புக்கள் தேடிவரும். சகோதரர்கள் உங்கள் வளர்ச்சிக்கு பக்கபலமாக இருப்பார்கள். திருமண பேச்சுவார்த்தைகள் சுமுகமாக முடியும். உத்தியோகத்தில் புதிய பொறுப்புகள் தேடி வரும். மகிழ்ச்சியான நாள்.

ரிஷபம்

ரிஷபம்: எடுத்த காரியங்கள் அனைத்திலும் வெற்றி பெறுவீர்கள். உறவினர்கள் நண்பர்கள் உங்களுக்கு முக்கியத்துவம் தருவார்கள். வியாபாரத்தில் வேலை யாட்களை தட்டிக்கொடுத்து வேலை வாங்குவீர்கள். உத்தியோகத்தில் சவாலான விஷயங்களையும் சாதாரணமாக முடிப்பீர்கள். தொட்டது துலங்கும் நாள்.

மிதுனம்

மிதுனம்: நீண்டநாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். ஆடம்பரச் செலவுகளை குறைத்து சேமிப்பை அதிகரிப்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் உருவாகும். வியாபாரத்தில் புதிய முயற்சிகளால் லாபம் பெறுவீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் உங்களுக்கு உதவிகரமாக இருப்பார்கள். புதுமை படைக்கும் நாள்.

கடகம்

கடகம்: தாயாருடன் வீண் விவாதம் வந்து போகும். பழைய பிரச்னைகளுக்கு சுமூக தீர்வு காண்பீர்கள். பணப் பற்றாக்குறை நீடித்தாலும் தேவையான உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் பங்குதாரர்களின் பிரச்சனைகளை முடிப்பீர்கள். உத்தியோகத்தில் சூழ்ச்சிகளை முறியடித்து வெற்றி பெறுவீர்கள். தேவைகள் பூர்த்தியாகும் நாள்.

சிம்மம்

சிம்மம்: எந்த விஷயத்திலும் தைரியமாக செயல்பட்டு முன்னேறுவீர்கள். உடன்பிறந்தவர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். பிரபலங்களின் அறிமுகமும் நட்பும் கிடைக்கும். உத்தியோகத்தில் உயர் அதிகாரி கள் உங்களுக்கு முன்னுரிமை தருவார்கள். வெற்றி கிட்டும் நாள்.

கன்னி

கன்னி: கடந்த இரண்டு நாட்களாக குடும்பத்தில் இருந்து வந்த கூச்சல் குழப்பங்கள் விலகும். தள்ளிப்போன விஷயங்கள் உடனே முடியும். புதிய நண்பர்களால் நன்மை உண்டாகும். வியாபாரத்தில் புதிய முயற்சிகள் சாதகமாக முடியும். உத்தியோகத்தில் புது அதிகாரி உங்களை மதிப்பார். சந்தோஷமான நிகழ்வுகள் நடக்கும் நாள்.

துலாம்

துலாம்: ராசிக்குள் சந்திரன் இருப்பதால் எந்த விஷயத்திலும் விழிப்புணர்வுடன் செயல்படுவது நல்லது. உத்தியோகத்தில் அதிகாரிகள் தவறுகளை சுட்டிக்காட்டினால் மாற்றிக்கொள்வது நல்லது. வியாபாரத்தில் மந்தநிலை உருவாகும். பேச்சில் கவனம் தேவை. விழிப்புடன் செயல்பட வேண்டிய நாள்.

விருச்சிகம்

விருச்சிகம்: உங்கள் முயற்சிகளில் அலைச்சலும் பிரச்சினைகளும் உருவாகும். மற்றவர்களால் வீண் செலவுகளும், தொந்தரவுகள் அதிகரிக்கும்.முக்கிய கோப்புகளை கையாளும்போது கவனம் தேவை. வியாபாரத்தில் வேலையாட்களிடம் விவாதம் வேண்டாம். உத்தியோகத்தில் மேலதிகாரியிடம் இணக்கமாக செல்வது நல்லது. தடைகளை தாண்டி முன்னேறும் நாள்.

தனுசு

தனுசு: எண்ணங்கள் அனைத்தும் நிறைவேறும். நண்பர்களால் ஆதரவு கிடைக்கும். உங்களால் மற்றவர்கள் ஆதாயமடைவார்கள். நீண்ட நாளாக விரும்பிய பொருட் களை வாங்குவீர்கள். உத்தியோகத்தில் உயரதிகாரிகளால் பாராட்டப்படுவீர்கள். புகழ் கௌரவம் கூடும் நாள்.

மகரம்

மகரம்: உங்கள் செயல்களில் தீர்க்கமும் வெல்ல வேண்டுமென்ற விடாமுயற்சியும் வெளிப்படும். உங்களால் வளர்ச்சியடைந்த சிலர் உங்களுக்கு உதவுவார்கள். வியாபாரத்தில் புதிய சூட்சுமங்களை கற்றுக்கொள்வீர்கள். உத்தியோகத்தில் உங்கள் திறமை வெளிப்படும். முயற்சிகள் பலிதமாகும் நாள்.

கும்பம்

கும்பம்: கடந்த இரண்டு நாட்களாக குடும்பத்தில் இருந்த பிரச்சனைகள் நீங்கி மகிழ்ச்சி உண்டாகும். நீண்ட நாள் பிரச்சினைகளுக்கு எளிதாக தீர்வு காண்பீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களால் உயர்வும் உண்டாகும். உத்தியோகத்தில் திருப்திகரமான சூழ்நிலை உருவாகும். தடைப்பட்ட விஷயங்கள் இனிதே முடியும் நாள்.

மீனம்

மீனம்: சந்திராஷ்டமம் தொடர்வதால் மனதில் கவலைகளும் குழப்பங்கள் அதிகரிக்கும். செயல்களையும் முழுமையாக செய்யாமல் செய்ய முடியாமல் தவிப்பீர்கள். மற்றவர்களை குறை சொல்வதை நிறுத்திக் கொள்வது நல்லது. வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாவதில் தாமதம் உண்டாகும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளுடன் பிரச்சனைகள் வந்து நீங்கும். தடைகளும், தாமதங்களும் ஏற்படும் நாள்.