காதல் படத்தில் வரும் இந்த சிறுவனின் தற்போதைய நிலை! வைரலாகும் புகைப்படம்!!

காதல்

இயக்குனர் பாலாஜி சக்திவேல் இயக்கி நடிகர்கள் பரத், சந்தியா மற்றும் பலர் நடித்த காதல் படம் மெகா ஹிட் அடித்தது. இந்த படத்தில் அறிமுகமான சந்தியாவின் பெயரே காதல் சந்தியா என்று மாறியது. பரத் இந்த படத்தில் டூவீலர் மெக்கானிக்காக நடித்திவந்திருப்பர்.

மெக்கானிக் பையன், பணக்கார வீட்டு பெண் இடையேயான காதலை உயிரோட்டத்துடன் இந்தப்படம் பேசியது. இந்த படத்தின் பரத்தின் ஒர்க்‌ஷாப்பில் ஹெல்பராக ஒரு பொடியன் இருப்பான். இவனது காமெடிக்கும், உடல்மொழிக்கும் திரையரங்கமே அதிர்ந்து சிரித்தது.

அதிலும் டீயில் எச்சில் துப்பும் சீன் செம சிரிப்பு ரகம். தொடர்ந்து அந்த பொடியன் விஜயின் சிவகாசி, ஜெயம் ரவி நடித்த சம்திங் சம்திங் உள்பட சில படங்களிலும் நடித்திருந்தார்.

இவரது தற்போதைய இந்த புகைப்படங்கள் சமூகவலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.