மனைவியுடன் விவாகரத்து! இரண்டாம் திருமணத்துக்கு தயாரான பிரபல நடிகர்!!

சினிமா

மலையாள திரைத்துறையின் பிரபல நடிகர் செம்பன் வினோத். இவர் கடந்த 2010 ம்ஆண்டில் லிஜோ ஜோஸ் இயத்தில் வெளிவந்த நாயக்கன் என்னும் படத்தின் மூலம் மலையாளத்தில் நடிகராக அறிமுகமானார். அதன் பின்னர் வில்லன், ஹீரோ, காமெடியன் என பன்முக திறமையாளராக வலம் வந்தார்.

தற்போது ஃபாஹத் பாசில் நடிக்கும் ட்ரான்ஸ் என்ற படத்தில் நடித்து வருகிறார். சிறந்த நடிகருக்கான விருதை அவர் IFFK 2018 ல் பெற்றார். இவருக்கு ஏற்கனவே சுனிதா என்ற பெண்ணுடன் திருமணமாகி மகன் இருக்கிறார்.

இந்த நிலையில், கடந்த சில வாரங்களுக்கு முன் இவர் அவரது மனைவி சுனிதாவை விவாகரத்து செய்தார். இதை தொடர்ந்து, அவர் சைக்காலிஜிஸ்ட் மரியம் தாமஸ் என்பவரை அவரது சொந்த ஊரான கோட்டயத்தில் திருமணம் செய்யவிருப்பதாக தெரிவித்துள்ளார்.