நஞ்சாகும் ரத்தம்… மரணம் வரை போவது ஏன்? கொரோனா குறித்து கட்டாயம் இதை தெரிஞ்சிகோங்க.!

மருத்துவம்

உலகம் முழுவதும் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகளவு அதிகரித்து வருகிறது. இந்த வைரஸால் உடலில் என்னென்ன மாற்றங்கள் ஏற்படும் என்பது தொடர்பான விழிப்புணர்வு நமக்கு இருக்க வேண்டியது கட்டாயமான ஒன்றாகும். கொரோனா வைரஸ் உடலில் நோயெதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும் நபர்கள், இதய நோய் உள்ள நபர்கள் மற்றும் நீரிழிவு பிரச்சனை இருக்கும் நபர்களை அதிகளவு பாதிக்கும்.

கொரோனா வைரஸிற்கு எதிராக உடல் இயற்கையாக போராடியும் என்றாலும், மருத்துவரிடம் சென்று தேவையான சிகிச்சை எடுத்துக்கொள்வது அவசியம். நோயெதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும் நபர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும். இதனால் வயதான நபர்கள் மற்றும் குழந்தைகள் கவனத்துடன் இருக்க வேண்டும். முதல் நாள் காய்ச்சல் கொரோனா தொற்றாக இருக்கும்.

இதன்பின்னர் மூன்றாவது நாளில் இருமலும், தொண்டையில் வறட்சியும் ஏற்படும். மேலும், 80 விழுக்காடு நோயாளிகளுக்கு நோயின் அறிகுறி தென்பட்ட பின்னர் மூச்சுத்திணறல் பிரச்சனை ஏற்படும். இதனையடுத்து மூன்று முதல் நான்கு நாட்களில் நுரையீரல் தாக்க வாய்ப்புள்ளது. மூச்சுத்திணறல் தொடர்ந்து இருக்கும் பட்சத்தில், 8 வது நாள் முதல் நுரையீரல் எரிச்சல் ஏற்பட்டு, மூச்சுத்திணறலை கடுமையாக்கும்.

இந்த விஷயத்திற்கு பின்னர் நோயின் பாதிப்பு நுரையீரலில் இருந்து இரத்தத்திற்கு செல்லும். முதல் வாரத்தின் போது இரத்தம் நஞ்சாக மாறி உயிரை பறிக்கும். கொரோனா தொற்று தென்படும் நபர்களுக்கு சிகிச்சையளித்து சரி செய்ய 21 நாட்கள் எடுத்துக்கொள்ளும். இறக்கும் நபர்கள் 15 நாட்களில் இருந்து 22 நாட்களில் உயிரை இழப்பார்கள்.