இலங்கையில் பாடசாலை மாணவர்கள் மூவருக்கு கொரோனா வைரஸ் தொற்று!

கொரோனா வைரஸ்

இலங்கையில் இனங்காணப்பட்ட கொரோனா நோயாளர்களில் பாடசாலை செல்லும் மாணவர்களின் வயதுடைய மூன்று பேர் உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

கொழும்பு அங்கொட IDH வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருபவர்களில் குறித்த மூன்று பேரும் அடங்குகின்றனர். இவர்களில் இரண்டு மாணவிகளும் ஒரு மாணவரும் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதற்கு மேலதிகமாக ஒரு வயதும் 5 மாதங்களுமான குழந்தையும் கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறது.

இதேவேளை, புதிய கொரோனா தொற்றுக்குள்ளானதாக இலங்கையில் முதன் முறையாக அடையாளம் காணப்பட்ட இரண்டு சுற்றுலா வழிக்காட்டிகள் இருவரும் முழுமையாக குணமடைந்துள்ளனர்.

இலங்கையில் கொரோனா தொற்று நோய் உறுதி செய்யப்பட்ட 50 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.