உலக சந்தையில் உச்சத்தை தொட்ட தங்கத்தின் விலையில் ஏற்பட்ட திடீர் மாற்றம்!

தங்கத்தின் இன்றைய விலை நிலவரம்

உலக நாடுகளில் கொரானா பாதிப்பு, பெட்ரோலிய விலை வீழ்ச்சி, தொழில் வணிகத்துறைகளில் உற்பத்தி, ஏற்றுமதி, இறக்குமதி பாதிப்பு ஆகியவற்றால் கடந்த இரு வாரங்களாகப் பங்குச்சந்தைகள் தொடர்ந்து வீழ்ச்சியைச் சந்தித்து வருகின்றன. இதனால் தங்கம் விலையும் குறைந்தது

நேற்றைய விலையிலிருந்து இன்று கிராமுக்கு 34 ரூபாயும் ,சவரனுக்கு 272 ரூபாய் குறைந்து, 22 கேரட் தங்கத்தின் இன்றைய விலை ஒரு கிராம் ஒன்றுக்கு ரூ3,834ஆகவும், ஒரு சவரன் தங்கத்தின் விலையானது ரூ.30,672 ஆகவும் இன்று விற்பனை செய்யப்படுகிறது. நேற்று ஒரே நாளில் 1,140 குறைந்த குறிப்பிடத்தக்கது.

அதே போல் 24 கேரட் அளவிலான தங்கத்திற்கு ஒரு கிராம் ரூ.4,027 ஆகவும் ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.32,216 விற்பனை செய்யப்பட்டது.

வெள்ளி விலை கிராமுக்கு 37.80 காசுகளாகவும்,ரூ.37,800 ஆகவும் இன்று விற்பனை செய்யப்பட்டது.